மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 27 மே 2020

விபத்து: பைக் எரிந்து 2 பேர் பலி!

விபத்து: பைக் எரிந்து 2 பேர் பலி!

ஸ்ரீவைகுண்டம் அருகே நான்கு சக்கர வாகனம் மீது மோதியதில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில், அதில் பயணித்த இரண்டு இளைஞர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர்.

திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டணம் முத்துநகரைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவரது நண்பர் அசோக்குமார். இருவரும் திருச்செந்தூரிலுள்ள தனியார் கல்லூரியொன்றில் பி.ஏ. பொருளாதாரம் படித்து வந்தனர்.

இன்று (மே 13) இருவரும் இரு சக்கர வாகனத்தில் திருநெல்வேலி கிளம்பினர். ஸ்ரீவைகுண்டம் அருகே வந்தபோது, எதிரே வந்த வேன் மீது இவர்களது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது, இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் மூடி கழன்று விழுந்து எதிர்பாராதவிதமாகத் தீப்பற்றியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் அப்பகுதியில் இருந்தவர்களால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற இயலவில்லை. தகவல் கேட்டு தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். ஆனால் அதற்குள் இருவருமே உடல் கருகி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். வேன் ஓட்டுநர் சுடலையைக் கைது செய்தனர். இந்த விபத்தினால், திருநெல்வேலி – திருச்செந்தூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon