மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 27 மே 2020

தோனி ’தல’ இல்லையாம் எம்ஜிஆராம்: அப்டேட் குமாரு

தோனி  ’தல’ இல்லையாம் எம்ஜிஆராம்: அப்டேட் குமாரு

கொடூரமா மழை பேஞ்சு வெள்ளம் வந்து கொத்து கொத்தா போகுறதும் இங்கதான். அனல் காத்துல உள்ள இருக்குற ஸ்பேர் பார்ட்ஸ்லாம் எரிஞ்சு புகை வர்றதும் இங்கதான். ஆனாலும் பாருங்க ஐபிஎல் தோல்விதான் மக்களை ஆழமா பாதிச்சுருக்கு. ஏதோ ஒரு சின்ன பையன் தற்கொலை பண்ணபோறேன்னு சொன்ன வீடியோ மாதிரி பல பேர் நேர்லயே சொல்லிகிட்டு திரியுறாங்க. சரி ஏதோ வெயில் கொடுமையில இப்படி ஆயிட்டாங்கன்னு சொல்லத் தோணல. இவங்க ரியாக்‌ஷன் இந்த அளவுக்கு இருக்கும்னு தெரிஞ்சுருந்தா மேட்ச் நடக்குற நேரத்தை தவிர மற்ற நேரங்கள்ல தோனியில இருந்து மற்ற சிஎஸ்கே வீரர்களை பிரச்சாரத்துக்கு ஒவ்வொரு கட்சியும் இறக்கிவிட்ருக்கும். அட்லீஸ்ட் எம்ஜிஆர் வேஷம் போட்டு ஓட்டுகேட்குற மாதிரி தோனி வேஷம் போட்டாவது ஓட்டு கேட்ருப்பாங்க. அடுத்த எலெக்‌ஷன்ல இறக்குறாங்களான்னு பார்ப்போம். அப்டேட்டை பாருங்க.

@Akku_Twitz

மே 23 க்கு பிறகு , ரஜினிகாந்த் முக்கிய முடிவை அறிவிப்பார் #

நீங்க முடிவை அறிவிங்க தலீவரே அது முக்கியமானதா இல்லையானு நாங்க சொல்றோம்

@Kozhiyaar

ஆறுதல் தர ஆளில்லாத பொழுது அழுவதால் என்ன பயன்!?

@ShivaP_Offl

ஓட்டு மட்டும் தன்னுடைய ஜாதிக்காரனை பார்த்து போடுகிறோம்,

ஆனால் உடம்பு சரியில்லை என்றால் நல்ல டாக்டர்களை மட்டும் தேடி ஓடுகிறோம்...

நிதர்சனம்

@saravananucfc

உலகத்தை சுற்றி பார்க்க எந்த எல்லைக்கும் போவார் "மோடி"

@uma_Maheshwari1

அண்ணன் சீமானின் பேச்சுக்களை எடுத்து பெண்கள் அதிக அளவில் டிக்டாக் செய்கிறார்கள்,பெண்களின் ரசனையை எவராலும் கணிக்கமுடியாது என்பதற்கு மற்றுமொர் உதாரணம்.

@mohanramko

சிஎஸ்கே ஜெயிச்சா ஒரு மூட்டை சிமெண்ட்டா கொடுக்க போறாங்க, மும்பை இந்தியன்ஸ் ஜெயிச்சா ஒரு வருடம் ப்ரீ டேட்டா கொடுப்பாங்க'னு பக்கத்து வீட்டு பையன் சொல்லிட்டு போறான்...

@saravananucfc

அம்பானி சென்னை டீமுக்கு காசு குடுத்துட்டார்

யார் சார் நீங்க?

ஜெயசூர்யா பேட்டில் ஸ்பிரிங் னு சொன்னவங்க

@Thaadikkaran

அப்றம் சன்டே எப்டி போச்சுன்னு கேட்டா, மொபைல்ல சார்ஜ் இருக்கிறவரை நல்லா போச்சு அப்றம் ஒரே மொக்கையா போச்சுன்னு சொல்றே லெவலில் இருக்கு..!!

@nandhu_twitts

அப்படி வா "வழி"க்கு..

என்று அழைக்கிறது "கூகுள்" மேப்..!!

@mekalapugazh

தெர்மோகோல் போட்டு சூரியனை மறைக்கமுடியுமுன்னு சொன்னால்..

அது நம்மூரு மந்திரி..

மேகமூட்டத்தைப் பயன்படுத்தி ராடாரை ஏமாத்தலாமுன்னு சொன்னால்..

அது பிரதம மந்திரி.

அம்புடுத்தேன்.

@HAJAMYDEENNKS

இந்தியன் ப்ரிமியர் லீக் முடிஞ்சிடுச்சு

அடுத்து இந்தியன் பார்லிமென்ட் லீக் முடிவுக்காக நாடே வெய்ட்டிங் !

@ajmalnks

1988 லேயே டிஜிட்டல் காமிரா, இ-மெயில் பயன்படுத்தினவன் நான்-மோடி

இரண்டுமே மக்கள் பயன்பாட்டுக்கு வந்த ஆண்டு 1995.

வடையில பருப்பு சரியா வேகலை மோடிஜி.

@SubashiniBA

வெள்ளம் வந்தப்போ சோறு இல்லேனு அழுதவன் எல்லாம்

சென்னை அணி தோத்துருச்சு அழுவுறாங்க..!

அதே சென்னையில் தான் இப்பொழுது தண்ணீர் பஞ்சமும் இருக்கு அதை யோசிக்க யாருக்கும் நேரம் இல்ல

இருக்கு இந்த வருடமும் டிசம்பர் மாதம்

@mohanramko

ஐபிஎல் முடிவை கடைசி பந்து வரைக்கும் கொண்டு போன மாதிரி, மே 23 அன்னிக்கு எதிர்பார்க்காதீங்க.... ,

அப்ப நான் இன்னும் உக்கிரமா இருப்பேன்..

@shivaas_twitz

ஹோட்டலுக்கு போய் உக்காந்ததும், உனக்கு என்ன வேணும்னு கேட்டா, நீ என்ன சொல்லப்போறனு கேக்குறது என்ன பழக்கம்னு தெரியல...?!

@RahimGazzali

எமர்ஜென்சி காலத்தில் இந்திராகாந்தியை விமர்சித்து நானும் அமீத்ஷாவும் காந்திநகரில் இருந்த ஒரு ப்ரவுசிங் செண்டருக்கு போய் மீம்ஸ் ஒன்றை க்ரியேட் செய்து வெளியிட்டோம். அடுத்த நாளே போலீஸ் எங்களை கைது செய்து சிறையில் அடைத்தது. அத்வானிதான் ஜாமீனில் எடுத்தார்!- மோடி

@Suyanalavaathi

வீட்டுல மரம் வளர்த்தா ஆன்லைன் ஷாப்பிங் செய்பவருக்கு எக்ஸ்ட்ரா ஆபர் னு சொன்னாதான் மரம் வளர்ப்பாங்க போல !!

@Annaiinpillai

தவறான விஷயங்களை யோசிக்காமல் செய்கிறோம்...! சரியான விஷயத்தை யோசித்த பின்னும் செய்ய மறுக்கிறோம்....!

@amuduarattai

குழந்தைகள் நன்றாக பேச ஆரம்பித்தவுடன், கணவரிடம் கேட்க வேண்டிய எடக்கு மடக்கான கேள்விகளை, குழந்தைகளை விட்டு கேட்கச் சொல்வது மனைவிகளின் டிசைன்.

@RahimGazzali

மோடி பிறந்த செய்தியை எல்லோருக்கும் அவரது அப்பா வாட்சப் செய்து சொன்னார். ஒரே நேரத்தில் கோடிக்கான பேருக்கு ஃபார்வர்ட் செய்யப்பட்டதால் அதன் சர்வர் திணறியது. இதனால் கடுப்பான வாட்சப் நிர்வாகம் இனி 5 பேருக்கு மேல் ஒரு செய்தியை ஃபார்வர்ட் செய்ய முடியாது என்று கட்டுப்பாடு கொண்டுவந்தது.

-லாக் ஆஃப்

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon