மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

இணையத்தை கலக்கும் அர்ஜுன் ரெட்டி ரீமேக்!

இணையத்தை கலக்கும் அர்ஜுன் ரெட்டி ரீமேக்!

பாலிவுட் முன்னணி ஹீரோவான ஷாகித் கபூர் நடித்துள்ள அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக் டிரெய்லர் இன்று மதியம் வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகிறது.

2017ஆம் ஆண்டு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்த அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு படத்தின் வெற்றி ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்தது. நான்கு முதல் ஐந்து கோடிக்குள் தயாரான இப்படம் வசூல் ரீதியாக ஐம்பது கோடிக்கும் மேல் வாரிக் குவித்தது. குடி நோய்க்கும் கோபத்துக்கும் அடிமையான மருத்துவராக வரும் அர்ஜுன் ரெட்டி கதாபாத்திரம் ஆண்கள் மட்டுமின்றி பெண்களையும் ஈர்த்துள்ளது. தேவதாஸ் கதாபாத்திரத்தின் நவீன வடிவமாக இருக்கும் அர்ஜுன் ரெட்டி, தமிழ் மற்றும் இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது.

இந்நிலையில், கபிர் சிங் என்ற பெயரில் இந்தியில் உருவாகிய திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மதியம் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. விஜய் தேவரகொண்டா நடித்த பாத்திரத்தில் ஷாகித் கபூர், ஷாலினி பாண்டே நடித்த பாத்திரத்தில் கியாரா அத்வானியும் நடித்துள்ளனர்.

அர்ஜுன் ரெட்டியில் இருந்த அதே வேகமும் துடிப்பும் கபீர் சிங்கிலும் அப்படியே வந்திருக்கிறது. காரணம் தெலுங்கு மூலத்தை இயக்கிய அதே சந்தீப் ரெட்டி வங்கா தான் கபீர் சிங்கையும் இயக்கியுள்ளார். வெளியான நான்கு மணி நேரத்தில் 20 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து தற்போது டிரெண்டிங்காகி வருகிறது இப்படத்தி டிரெய்லர்.

கபிர் சிங் படம் வரும் ஜூன் மாதம் 21ம் தேதி ரிலீஸாக உள்ளது. சினி ஒன் ஸ்டூடியோஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை குல்சன் குமார் மற்றும் டீ சீரியஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

கபீர் சிங் டிரெய்லர்

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon