மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

போலீஸ் அவதாரத்தில் ஆர்.கே. சுரேஷ்

போலீஸ் அவதாரத்தில் ஆர்.கே. சுரேஷ்

பாலாவின் தாரை தப்பட்டை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ், கடைசியாக நடித்த படம் பில்லா பாண்டி. இத்திரைப்படம் ரசிகர்களிடம் போதிய வரவேற்பை பெறாமல் போனது. ஆனாலும் கதாநாயகனாக ஜெயித்தே ஆகவேண்டும் என கடும் முயற்சியில் இருக்கும் ஆர்.கே. சுரேஷ் தமிழ் மலையாளம் என இருமொழிகளில் உருவாகும் படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

கொச்சின் ஷாதி அட் சென்னை 03 என தலைப்பிடப்பட்டிருக்கும் இப்படம், கொச்சினில் தொடங்கி சென்னையில் முடிவடைவதாய் இருக்கும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். படத்தில் பங்கு பெறும் 70 சதவீத நடிகர்கள் தமிழ் பேசுவதாகவும் மீதமுள்ள நடிகர்கள் மலையாளம் பேசுவது போலவும் கதையமைக்கப்பட்டிருக்கிறது.

அதிகாரத்தில் இருக்கும் ஒருவன் ஷாதிகா என்ற ஏழைப்பெண்ணுக்கு இழைக்கும் பாலியல் வன்கொடுமையை மையப்படுத்திய கதை இது. இப்படம் பெண்கள் மீதான பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வாக இருக்கும் என டெக்கான் குரோனிக்கள் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் ஆர்.கே. சுரேஷ் தெரிவித்துள்ளார்.

மஞ்சித் திவாகர் இயக்கும் இப்படத்தில் வினோத் கிரிஷ்ணன், சிவாஜி குருவாயூர், சார்மி, சினோஜ் வர்கீஸ், நேஹா சக்சேனா, அஷிதா, ரத்னவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அய்யப்பன் ஒளிப்பதிவு செய்ய சன்னி விஸ்வனாத் இசையமைக்கிறார்.

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon