மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 20 நவ 2019

விஜய் 63: வெளியாகும் படங்களும் அவிழும் கதையும்!

விஜய் 63: வெளியாகும் படங்களும் அவிழும் கதையும்!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுவருகிறது.

சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில் படக்குழு 70% காட்சிகளை படமாக்கியுள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. சமீபத்தில் வெளியான விஜய் வீல் சேரில் அமைந்திருக்கும் புகைப்படம் கதை பற்றிய யூகங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள நடிகைகள் எடுத்த புகைப்படங்கள் அவர்களது கதாபாத்திரம், தோற்றம் ஆகியவற்றை விளக்கும் வகையில் அமைந்துள்ளது.

பெண்கள் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். இளம் நடிகைகள் பலர் கால்பந்தாட்ட வீராங்கனைகளாக நடித்துள்ளனர். இந்துஜா, ரெபா மோனிகா ஜான் ஆகியோர் அதில் முக்கியமானவர்கள்.

தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில் இந்துஜா தமிழ்நாடு அணிக்காக விளையாடுவது உறுதியாகியுள்ள நிலையில் ஜெர்சி நம்பர் ‘63’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய் நடிக்கும் 63ஆவது படத்தை குறிக்கும் வகையில் இந்த எண்ணை தேர்வு செய்திருக்கலாம் என்று ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

ரெபா மோனிகா ஜான் இடம்பெற்றுள்ள புகைப்படத்தில் அவரது முகத்தின் இடது பக்கம் ஆசிட் வீச்சினால் சிதைந்துள்ளது போல் மேக்கப் போடப்பட்டுள்ளது. இதனால் அணியில் இடம்பெறும் வீராங்கனைகளுக்கு அழுத்தமான முன்கதை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon