மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 18 நவ 2019

ரஜினியை நகலெடுக்கும் சிவகார்த்திகேயன்

ரஜினியை நகலெடுக்கும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படம் மே 17ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அதன் புரோமோஷன் பணிகள் வேகமெடுத்துள்ளன.

வேலைக்காரன் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், நயன்தாரா மீண்டும் இணைந்துள்ள இப்படத்தின் டீசர், டிரெய்லர் ஏற்கனெவே வெளியாகி கவனம் பெற்றன. தற்போது ஹிப்ஹாப் தமிழா இசையில் அனிருத் பாடியுள்ள ‘டக்குனு டக்குனு’ பாடலின் வீடியோ வெளியாகி வரவேற்பு பெற்றுவருகிறது. இப்பாடலை மிர்ச்சி விஜய் எழுதியுள்ளார்.

டிரெய்லரில் இடம்பெற்ற காட்சிகள் மன்னன் படத்தில் தொழிலதிபராக நடித்த விஜய்சாந்திக்கும், ஆலையில் ஊழியராக நடித்த ரஜினிக்கும் இடையே நடைபெறும் காட்சிகளை நினைவுபடுத்தும் விதமாக அமைந்திருந்தது. மேலும் ஒரு காட்சியில் ரஜினியைப் போல வசனம் பேச சிவகார்த்திகேயன் முயற்சிப்பதாகவும் காட்டப்பட்டிருந்தது.

தற்போது வெளியாகியுள்ள டக்குனு டக்குனு பாடலில் அண்ணாமலை படத்தில் பால்காரராக நடித்த ரஜினியின் தோற்றத்தையும் உடல்மொழியையும் சிவகார்த்திகேயன் பிரதிபலிக்கிறார்.

ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

டக்குனு டக்குனு

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon