மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 16 ஜூலை 2020

பழவேற்காடு: படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

பழவேற்காடு: படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

தடையை மீறி பழவேற்காடு ஏரியில் மேற்கொள்ளப்பட்ட படகு சவாரியின்போது ஏற்பட்ட விபத்தில் காசிமேட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணி உயிரிழந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரி முக்கிய சுற்றுலாத்தலமாக இருந்து வந்தது. 2012ஆம் ஆண்டு அந்த ஏரியில் நடந்த படகு சவாரி விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 22 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக, அங்கு படகு சவாரி நடத்த திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. தற்போது வரை தடை அமலில் இருந்துவந்தாலும், அவ்வப்போது சிலர் படகு சவாரி மேற்கொண்டு வருவது நடந்து வருகிறது.

நேற்று (மே 12) சென்னை காசிமேட்டைச் சேர்ந்த சிலர் பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் தடையை மீறிப் படகு சவாரி மேற்கொண்டனர். அதில் 16 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, முகத்துவாரம் நோக்கி வந்த வேறொரு படகின் மீது அப்படகு மோதியதால் நிலை தடுமாறியது. இதனால் படகில் இருந்த அனைவரும் நீரில் விழுந்தனர். அருகில் இருந்த மீனவர்கள், அனைவரையும் காப்பாற்றிக் கரை சேர்ந்ததனர். அவர்கள் அனைவரும் பழவேற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனாலும் மேரி ஜான் என்ற பெண்மணி இந்த விபத்தில் உயிரிழந்தார்.

படகில் இருந்தவர்கள் பழவேற்காடு நடுவூர் மாதாகுப்பத்தில் நடந்த திருவிழாவுக்கு வந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. தடையை மீறிப் படகு சவாரி செய்தது தொடர்பாக, திருப்பாலைவனம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon