மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

விஷாலை சீண்டும் எஸ்.வி.சேகர்

விஷாலை சீண்டும் எஸ்.வி.சேகர்

“நடிகர் சங்கச் செயலாளர் விஷால் வாய் ஜாலத்தால் ஏமாற்றி வருகிறார். அவருக்கு அப்ளிகேஷன் கூட எப்படி எழுதுவது எனத் தெரியவில்லை' என எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத்திற்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் நாசர், விஷால் கார்த்தி ஆகியோர் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவியில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் திருச்சியில் உள்ள திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய எஸ்.வி.சேகர், "தற்போது உள்ள நடிகர் சங்கம், சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுகிறது. நவம்பர் மாதத்திற்குப் பின் நடிகர் சங்கத்தில் நடப்பது அனைத்தும் சட்டத்திற்கு புறம்பானதுதான். ராதிகா தலைமையிலோ, டி.ராஜேந்தர் தலைமையிலோ, அல்லது எனது தலைமையிலோ மீண்டும் ஒரு சிறந்த குழு நடிகர் சங்கத்துக்கு அமையும். நடிகர் சங்கச் செயலாளர் விஷால் வாய் ஜாலத்தால் ஏமாற்றி வருகிறார். அவருக்கு அப்ளிகேஷன் கூட எப்படி எழுதுவது எனத் தெரியவில்லை" என்று கூறினார்.

சென்றாண்டு பாண்டவர் அணியை எதிர்த்து போட்டியிட்ட சரத்குமார், ராதா ரவி மீது நீதிமன்றத்தில் வழக்குள்ளதால் அவர்களால் போட்டியிட முடியாது என தெரிகிறது.

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon