மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 செப் 2020

ஆறாம் கட்டத் தேர்தல்: மந்தமான வாக்குப்பதிவு!

ஆறாம் கட்டத் தேர்தல்: மந்தமான வாக்குப்பதிவு!

2019 மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. நேற்று ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மே 19ஆம் தேதியன்று இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 23ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

நேற்று (மே 12) ஆறாம் கட்டத் தேர்தலின்போது உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, டெல்லி, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 59 மக்களவைத் தொகுதிகளில் 979 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்குப்பதிவுக்காக மொத்தம் 1,13,167 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இரவு 7 மணி வரையில் மொத்தமாக 61.14 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன. மாநில வாரியாக, மேற்கு வங்கத்தில் 80 விழுக்காடு, டெல்லியில் 56.11 விழுக்காடு, ஹரியானாவில் 62.91 விழுக்காடு, உத்தரப் பிரதேசத்தில் 53.37 விழுக்காடு, பிகாரில் 59.29 விழுக்காடு, ஜார்கண்டில் 64.46 விழுக்காடு, மத்தியப் பிரதேசத்தில் 60.40 விழுக்காடு ஆகிய விகிதங்களில் வாக்குகள் பதிவாகியுள்ளன.

மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளர் பாரதி கோஷை திருணமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசுகையில், “மம்தா பானர்ஜி ஆடிப்போயிருக்கிறார். அதனால்தான் தேர்தலைச் சீர்குலைக்க திருணமூல் காங்கிரஸ் கட்சியினர் முயற்சி செய்கின்றனர். இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

திரிபுரா மாநிலத்தில் கடந்த வாக்குப்பதிவின்போது சில பகுதிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று திரிபுராவில் 168 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த மறு வாக்குப்பதிவில் 72.28 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

.

.

மேலும் படிக்க

.

திருப்பரங்குன்றம்: முதல்வர் நடத்திய அவசர மீட்டிங்!

.

டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்!

.

சினி டிஜிட்டல் திண்ணை: பாழடைந்து கிடக்கும் பிக் பாஸ் வீடு!

.

தேர்தல் களம்: கிங் மேக்கர்களும் கிங்குகளும்!

.

அனைவரும் சேர்ந்துதான் ஆட்சியைக் கவிழ்க்க முடியும்: தினகரன்

.

.

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon