மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 ஜன 2021

ONE PLUS 7 PRO: ஆச்சரியமா? அதிசயமா? ஏமாற்றமா?

ONE PLUS 7 PRO: ஆச்சரியமா? அதிசயமா? ஏமாற்றமா?வெற்றிநடை போடும் தமிழகம்

சிவா

One Plus 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மே 14ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றன. ‘நான் தான் ராஜா’ என சொல்லிக்கொண்டு ஸ்மார்ட்போன் உலகத்தில் வலம்வந்த மாடல்களை ஓரமாக உட்காரவைத்த பெருமை ஒன் ப்ளஸ் கம்பெனிக்குச் சொந்தம்.

Flagship என்று சொல்லப்படும் High-end ஸ்மார்ட்போன்களுக்குப் போட்டியாக, அவற்றில் இல்லாத வசதியோடும் ரிலீஸாகி சரசரவென்று மேலே வந்து, தனக்கென ஓர் இடத்தை பிடித்தது ஒன் ப்ளஸ் நிறுவனம். இப்போது அதனுடைய சிறந்த மாடலை ரிலீஸ் செய்ய தயாராகிவருகிறது.

அதிக வசதிகள், குறைந்த விலை என்பதுதான் ஒன் ப்ளஸ் கம்பெனி இவ்வளவு சீக்கிரம் முன்னேறக் காரணம். ஆனால், அந்த நிறை ஒன் ப்ளஸ் 7 சீரிஸ் மாடல்களில் இருக்குமா? கடைசியாக சேல்ஸுக்குக் கொண்டுவந்த மாடல்களைக்கூட ஒன் ப்ளஸ் 6 மற்றும் 6T என்று தான் புரமோட் செய்தார்கள். ஆனால், இந்த முறை ஒன் ப்ளஸ் 7 மற்றும் 7 pro என்று பெயர் வைக்க காரணம் என்ன என்பதே இதில் நாம் பார்க்கவிருக்கும் தகவல்.

ஒன் ப்ளஸ் அறிமுகப்படுத்தியபோது Flagship Killer என்று செல்லமாக அழைக்கப்பட்டது. காரணம், அப்போது மார்கெட்டில் இருந்த எல்லா போன்களையும் ஒன் ப்ளஸ் காலி செய்தது. ஆனால், இப்போது ஒன் ப்ளஸ் நிறுவனமே தன்னுடைய ஸ்மார்ட்போனை professional ஸ்மார்ட்போன் என்று சொல்லக் காரணம், ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தப்படும் எல்லா துறைகளிலும் இப்போதைக்கு இருக்கும் ஸ்மார்ட்போனை எல்லாம் ஓரம் வைத்துவிட்டு இதை மாற்றிவிடலாம் என்ற அறைகூவலாகவே அது பார்க்கப்படுகிறது.

இதற்கு உதாரணமாக, நேஷனல் ஜியாக்ரபிக் நிறுவனத்தின் கவர் போட்டோ ஷூட்டுக்கு, ஒன் ப்ளஸ் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதேசமயம், Wired நிறுவனமும் ஒன் ப்ளஸ் ஸ்மார்ட்போனைச் சோதனை செய்து பார்த்திருக்கிறது. இத்தனை நிறுவனங்களும் ஒன் ப்ளஸ் 7 சீரிஸ் மேல் இவ்வளவு கவனம் செலுத்துவதற்கான காரணம் 48 MP, 16 MP, 8 MP என மூன்று விதமான பின்பக்க கேமராக்களுடன் இந்த ஸ்மார்ட்போன் பெற்றிருக்கிறது.

48MP கேமரா HDR போட்டோக்களை எந்த விதமான செயற்கைத் தனமும் இல்லாமல் எடுக்கவும் 16MP Wide Angle கேமரா கிட்டத்தட்ட கண்களால் பார்ப்பது மாதிரியான Wide angle Shots எடுக்கவும் பயன்படுவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதில் முக்கியமாகப் பார்க்க வேண்டியது, 8 MP Telescope Lens கேமரா தான். கிட்டத்தட்ட 3 மடங்கு zoom செய்து போட்டோ எடுத்திருந்தும், குவாலிட்டி குறையாத போட்டோவை ஒன் ப்ளஸ் 7 சீரிஸ் கொடுத்திருக்கிறது. நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் சேக்ரட் கேம்ஸ் நிகழ்ச்சியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் ஒன் ப்ளஸ் 7 சீரிஸில்தான் எடுத்திருக்கிறார்கள்.

கேமராவுக்கு அடுத்தபடியாக கேம் விளையாடுவதற்காகவே ஸ்மார்போன்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன என்பதால், இந்தியாவின் முன்னணி கேமர்ஸ் பலரிடமும் 7 சீரிஸ் மாடல்களைக் கொடுத்திருகிறார்கள். அதில் அதிக திறனை இழுக்கும் கேம்களை விளையாடிப் பார்த்த கேமர்ஸ், “என் கம்ப்யூட்டர் அல்லது எமுலேட்டரில் விளையாடுவதைவிடவும் இந்த ஸ்மார்ட்போன்ல ஸ்மூத்தா இருக்கு” என்று சொல்லிருக்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் போனில் இருக்கும் Snapdragon 855 சிப்செட் பிராசஸர்தான்.

ஸ்மார்ட்போன் பிராசஸர் கண்டுபிடிப்பில் முன்னணி நிறுவனமாக இருக்கும் குவால்கம் கம்பெனியின் புதிய வெளியீடு தான் Snapdragon 855. ஸ்மார்ட்போன் விற்பனை புதிய கட்டத்துக்கு போகும்னு சொல்லக்கூடிய அளவுக்கு புதிய திறன்களோட வெளிவந்திருக்கும் Snapdragon 855 பிராசஸர் இருப்பதால், அதிக டேட்டாவை பிராசஸ் செய்யக்கூடிய கேம் அல்லது அப்ளிகேஷனாக இருந்தாலும் சொடக்கு போடும் நேரத்தில், எல்லா வேலைகளையும் செய்து முடிக்கும். இதற்கு உதவ 6 GB RAM இருக்கும் என்று சொல்லப்பட்டாலும், 8 GB முதல் 12 GB வரை இருந்தால் தான் அதிக விலைக்கு விற்கமுடியும். இவ்வளவு சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கும் ஒரு ஸ்மார்ட்போனை தொடர்ந்து பயன்படுத்த பேட்டரி அளவு முக்கியம் என்பதால், 4150mah வரை பேட்டரி இருக்கும் எனப் பார்க்கலாம். இந்த வசதிகள் எல்லாம் இருந்தால் தான், இன்றைய மார்கெட்டில் டாப் மாடல் ஸ்மார்ட்போன் என்ற இடத்தைப் பெற முடியும். இதில் பல விஷயங்கள் ஒன் ப்ளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இருக்க அதிக வாய்ப்புகள் இருந்தாலும், இந்த ஸ்மார்ட்போனை அதிசயமாகப் பார்க்க அதற்கு மேலும் ஒரு காரணம் இருக்கிறது. அதுதான் செல்ஃபி கேமரா.

OPPO, VIVO மாடல்களைப் போலவே Elevating Front Camera வசதி ஒன் ப்ளஸ் 7 சீரிஸில் இருப்பது உறுதியாக தெரிந்துவிட்டது. அதேசமயம், இந்த மாடல்கள் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டது என்றும் அந்நிறுவனம் விளம்பரப்படுத்துகிறது. Elevating Camera இருந்தால், அது கீழே போகவும் மேலே வரவும் ஒரு இடைவெளி கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆனால், அது இல்லாமல் ஒரு Elevating Front Cameraவை எப்படி ஒன் ப்ளஸ் நிறுவனம் சாத்தியமாக்கியது என்பதைப் பார்க்கவே, கஸ்டமர்கள் மட்டுமில்லாமல் பல ஸ்மார்ட்போன் கம்பெனிகளும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

எனவே, மே 14ஆம் தேதி தனது மாடல்களை ரிலீஸ் செய்து ஸ்மார்ட்போன் உலகத்தை அசைத்துப் பார்க்கவிருக்கும் ஒன் ப்ளஸ் நிறுவனம் இவ்வளவு வசதிகள் கொண்ட ஒன் ப்ளஸ் 7 சீர்ஸ் குறைந்த விலைக்குக் கொண்டுவராது. இத்தனை நாட்கள் ஒன் ப்ளஸ் மாடல்கள் மீது ஒட்டப்பட்டிருந்த ‘குறைந்த விலை’ என்ற லேபிளுக்கு இனி வேலையில்லாமல் போய்விட்டால், மற்ற நிறுவனங்களைப் போலவே கஸ்டமர்களைப் பிடிக்கக் குறைந்த விலைக்கு விற்ற பட்டியலில் ஒன் ப்ளஸ் நிறுவனம் இடம்பெறும்.

.

.

மேலும் படிக்க

.

திருப்பரங்குன்றம்: முதல்வர் நடத்திய அவசர மீட்டிங்!

.

டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்!

.

சினி டிஜிட்டல் திண்ணை: பாழடைந்து கிடக்கும் பிக் பாஸ் வீடு!

.

தேர்தல் களம்: கிங் மேக்கர்களும் கிங்குகளும்!

.

அனைவரும் சேர்ந்துதான் ஆட்சியைக் கவிழ்க்க முடியும்: தினகரன்

.

.

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon