மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 18 ஜன 2021

எடப்பாடி புரட்சிப் பெருந்தகையா? - தினகரன்

எடப்பாடி புரட்சிப் பெருந்தகையா? - தினகரன்

ஓட்டப்பிடாரம் பகுதியில் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (மே 12) பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், “அதிமுகவை உடைத்து ஆட்சியைக் கவிழ்க்க டிடிவி தினகரன் முயற்சி செய்தார். அத்தனையும் தோல்வியில் முடிந்தது. இதே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் தினகரனுக்குப் பதவியைக் கொடுத்தது.

புரட்சித்தலைவி அம்மாவின் உழைப்புதான் அவருக்கு அடையாளம் கொடுத்தது. அவர் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகிய கட்சி அதிமுக. இரட்டை இலை சின்னம்தான் அவருக்கு வாழ்வையும், அடையாளத்தையும் கொடுத்தது. அந்த இரட்டை இலைச் சின்னத்தை முடக்க வேண்டுமென்று அவர் உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் வழக்கு போட்டார்.

திமுகவும் அமமுகவும் வெளியில் எதிரிகள்போலக் காட்டிக்கொள்கின்றனர். ஆனால், உள்ளுக்குள் ஒன்றாக இணைந்து போட்டியிடுகின்றனர். அவர்கள் போட்டியிடுவதன் காரணமே அவர்கள் வெற்றி பெற வேண்டுமென்பது அல்ல; அதிமுகவின் வெற்றி வாய்ப்பைத் தடுக்க வேண்டுமென்ற நோக்கத்தில்தான் போட்டியிடுகின்றனர். அப்படிப்பட்ட தீய எண்ணம் கொண்டவர்களுக்கு இந்தத் தேர்தல் மூலமாக தகுந்த பாடம் புகட்ட வேண்டும்” என்று கூறினார்.

பின்னர் சூலூர் பகுதியில் அமமுக வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், “மதுரையில் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சிப் பெருந்தகை என்று பட்டம் சூட்டியுள்ளனர். இதைக் கேட்டால் புரட்சித் தலைவர் எம்ஜிஆரும் புரட்சித் தலைவி அம்மாவும் எங்களுக்கு புரட்சி என்ற பட்டமே வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள்.

புரட்சிப் பெருந்தொகை என்று அவருக்குப் பட்டம் சூட்டியிருந்தால் சரியாக இருந்திருக்கும். புரட்சி என்ற பட்டம் யாருக்கு வழங்கப்பட வேண்டும்? மோடியிடம் மண்டியிட்டுத் தோப்புக்கரணம் போடுபவர் எல்லாம் புரட்சிப் பெருந்தகையா?” என்று கேள்வியெழுப்பினார்.

.

மேலும் படிக்க

.

திருப்பரங்குன்றம்: முதல்வர் நடத்திய அவசர மீட்டிங்!

.

டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்!

.

சினி டிஜிட்டல் திண்ணை: பாழடைந்து கிடக்கும் பிக் பாஸ் வீடு!

.

தேர்தல் களம்: கிங் மேக்கர்களும் கிங்குகளும்!

.

அனைவரும் சேர்ந்துதான் ஆட்சியைக் கவிழ்க்க முடியும்: தினகரன்

.

.

.

.

மேலும் படிக்க

.

திருப்பரங்குன்றம்: முதல்வர் நடத்திய அவசர மீட்டிங்!

.

டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்!

.

சினி டிஜிட்டல் திண்ணை: பாழடைந்து கிடக்கும் பிக் பாஸ் வீடு!

.

தேர்தல் களம்: கிங் மேக்கர்களும் கிங்குகளும்!

.

அனைவரும் சேர்ந்துதான் ஆட்சியைக் கவிழ்க்க முடியும்: தினகரன்

.

.

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon