மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

இன்ஸ்டகிராமை ரசிக்கும் சிம்பன்சி!

இன்ஸ்டகிராமை ரசிக்கும் சிம்பன்சி!

டிஜிட்டல் டைரி! - சைபர் சிம்மன்

சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவும் படங்களையும், வீடியோக்களையும் பார்த்து ரசித்தோமா, நம் பங்குக்குப் பகிர்ந்துகொண்டோமா, வேறு வேலை பார்த்தோமா என்று இருந்துவிடுவது சரியாக இருக்காது. பகிரப்படும் படங்கள் சொல்லும் சேதி என்ன எனக் கொஞ்சம் யோசித்துப் பார்ப்பது நலம்.

உதாரணத்துக்கு அண்மையில் வைரலான இன்ஸ்டகிராமை ரசிக்கும் சிம்பன்சி வீடியோவையே எடுத்துக்கொள்ளலாம். மைக் ஹால்டன் என்பவர் பகிர்ந்துகொண்ட இந்த வீடியோவில் சிம்பன்சி ஒன்று கையில், டேப்லெட் போன்ற ஒரு கேட்ஜெட்டை வைத்துக்கொண்டு, இன்ஸ்டகிராம் பக்கத்தில் படங்களையும், வீடியோக்களையும் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தது. அந்த சிம்பம்சி மனிதர்கள் போலவே இன்ஸ்டகிராமில் படங்களைப் பார்த்ததோடு, சிலவற்றை லைக்கும் செய்தது.

சின்பன்சி இன்ஸ்டகிராமைப் பார்த்து ரசிப்பது என்பது நம்ப முடியாத ஆச்சரியம்தானே! எனவேதான் இந்த வீடியோ பல்லாயிரக்கணானோரால் பகிரப்பட்டு வைரலாகப் பரவியது. வைரலான சிம்பன்சி வீடியோ என்பது ஊடகங்களுக்கும் சரியான சங்கதி என்பதால், இது தொடர்பான செய்தி பல ஊடகங்களில் வெளியாகி மேலும் வைரலானது.

ஜேன் கோடாலின் கோபம்!

இந்த வைரல் வீடியோ ஜேன் கோடாலைப் (Jane Goodall) பதற வைத்திருக்கிறது. கோடால், சிம்பென்சிகள் நலனுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கும் விலங்கு நல ஆர்வலர் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். வாழ்நாளில் பெரும்பகுதியை அவர் காடுகளில் சிம்பன்சிகளுடன் உலாவுவதில் செலவிட்டிருக்கிறார். சிம்பன்சிகளை அவரைவிட நன்கறிந்தவர் இருக்க முடியாது.

அதனால்தான் வைரலாகப் பரவியிருக்கும் இந்த வீடியோ காட்சி சிம்பன்சிகளைப் பொறுத்தவரை வில்லங்கமாக மாற வாய்ப்பிருப்பதாக அவர் எச்சரித்திருக்கிறார். “சமூக ஊடகங்களில் பரவியிருக்கும் குட்டி சிம்பன்சியின் வீடியோ என்னை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கிறது” என குறிப்பிட்டுள்ள கோடால் அதற்கான காரணங்களையும் விளக்கியிருக்கிறார். “சிம்பன்சிகள் அதிக சமூகத்தன்மை கொண்ட, மிகவும் புத்திசாலித்தனமானவை. மனிதர்கள்போலவே சிக்கலான உணர்வுகள் கொண்டவை. அவற்றை நாம் சரியாகச் சித்திரிப்பதும், அவை பிடிபட்ட சூழலில் சிறந்த பராமரிப்பைப் பெறுவதும் முக்கியம்” என்கிறார் கோடால்.

இந்த வீடியோவில் அவருக்கு என்ன பிரச்சினை என்றால், மிகவும் புத்திசாலித்தனமான, அழிந்துவிடும் அபாயத்தில் இருக்கும் சிம்பன்சிகளைச் செல்லப் பிராணிகள் போல இது சித்திரிப்பதாகவும், இந்தப் போக்கு சிம்பன்சிகளுக்கு ஆபத்தானது என்பதும்தான். சிம்பன்சிகள் கடத்தலுக்கு வழிவகுப்பதோடு, மனிதர்களுக்கும் சிம்பன்சிகளுக்கும் இடையிலான உறவில் சிக்கலை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் கோடால் கவலை தெரிவித்திருக்கிறார்.

சிம்பன்சி வீடியோவை எடுத்து வெளியிட்டிருக்கும் மைக் ஹால்டன் விலங்கு நல ஆர்வலர் எனத் தன்னைக் குறிப்பிட்டுக்கொண்டாலும் சர்ச்சைக்குரிய நபராகவே கருதப்படுகிறார். இன்ஸ்டகிராமில் லைக்களை அள்ளுவதற்காக அவர் இப்படி சிம்பன்சியைப் பயன்படுத்திக்கொண்டிருந்தால் அது கவலைக்குரிய போக்குதானே.

எனவே, சிம்பன்சி இன்ஸ்டகிராமை பார்த்து ரசிக்கிறது என வியந்துபோவதோடு நின்றுவிடாமல், இந்த வீடியோவுக்கான தேவை என்ன என்றும் கொஞ்சம் யோசிப்போமே!.

ஸ்லேக்கிற்கு மாறுங்கள்

சமூக ஊடகப் பரப்பில் கவனத்தை ஈர்த்திருக்கும் மற்றொரு விஷயம் ஸ்லேக் சேவை, ஐ.பி.ஓ. எனப்படும் பொதுப் பங்குகளை வெளியிட ஆயத்தமாகியிருப்பதுதான். நிறுவனம் நேரடியாக அமெரிக்கப் பங்குச் சந்தையில் தனது பங்குகளைப் பட்டியலிட உள்ளது. இதற்காகத் தொழில்முறை வல்லுநர்கள் உதவியை நாடவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

ஸ்லேக் சேவையா, புதிதாக இருக்கிறதே என நினைப்பவர்களுக்காக ஒரு சிறு அறிமுகம். வாட்ஸ் அப் போல ஸ்லேக்கும் ஒரு மேசிஜிங் சேவைதான். உலக அளவில் வாட்ஸ் அப் போலவே ஸ்லேக்கும் பிரபலமான சேவை. ஆனால், வாட்ஸ் அப்புக்கும் இதற்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவெனில், ஸ்லேக் பணியிடத்திற்கான மேசேஜிங் சேவை. அலுவலகங்களில் குழுவினர் தங்களுக்குள் தொழில்முறையான செய்திகளைப் பரிமாறிக்கொள்ள ஸ்லேக்கைப் பெருமளவில் பயன்படுத்துகின்றனர். இதற்கேற்ப ஸ்லேக்கும் பல பிரத்யேக வசதிகளைப் பெற்றிருக்கிறது. நவீன தலைமுறையினர் இமெயிலுக்குப் பதிலாக ஸ்லேக்கைப் பயன்படுத்திவருகின்றனர்.

லிங்க்டுஇன் சேவையை நீங்கள் அறிவீர்கள் அல்லவா? தொழில்முறை நோக்கிலான சமூக வலைப்பின்னல் சேவை இது. ஃபேஸ்புக்கிற்கு முந்தையது. அதே போல், ஸ்லேக் தொழில்முறையினருக்கான மெசேஜிங் சேவை. பணி சூழலில் இருப்பவர்கள் ஸ்லேக்கை பயன்படுத்திப்பார்க்கலாம். ஸ்லேக் புதிதாகப் பல அம்சங்களையும் அறிமுகம் செய்திருக்கிறது - https://slack.com/intl/en-in/.

.

மேலும் படிக்க

.

திருப்பரங்குன்றம்: முதல்வர் நடத்திய அவசர மீட்டிங்!

.

டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்!

.

சினி டிஜிட்டல் திண்ணை: பாழடைந்து கிடக்கும் பிக் பாஸ் வீடு!

.

தேர்தல் களம்: கிங் மேக்கர்களும் கிங்குகளும்!

.

அனைவரும் சேர்ந்துதான் ஆட்சியைக் கவிழ்க்க முடியும்: தினகரன்

.

.

.

.

மேலும் படிக்க

.

திருப்பரங்குன்றம்: முதல்வர் நடத்திய அவசர மீட்டிங்!

.

டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்!

.

சினி டிஜிட்டல் திண்ணை: பாழடைந்து கிடக்கும் பிக் பாஸ் வீடு!

.

தேர்தல் களம்: கிங் மேக்கர்களும் கிங்குகளும்!

.

அனைவரும் சேர்ந்துதான் ஆட்சியைக் கவிழ்க்க முடியும்: தினகரன்

.

.

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon