மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 21 ஜன 2021

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 9

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 9வெற்றிநடை போடும் தமிழகம்

பல்வேறு பண்டங்களை மானிய விலையில் மக்களுக்கு அரசு வழங்குவதற்குப் பதிலாக, அவர்களுடைய வங்கிக் கணக்கில் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தினால் அது மக்கள்நலத் திட்டங்களை அமல்படுத்துவதில் உள்ள ஊழலைக் களைவதற்கு உதவும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்டது. வங்கிக்கணக்கு தொடங்குவதாலும், அரசு வழங்கும் உதவியை மக்கள் நேரடியாகப் பணமாகவே பெறுவதாலும் பல இடைத்தரகர்களின் தேவை இல்லாமல் போகும்; இதனால் நலத்திட்டங்களின் பயன்களும் முழுமையாக அதன் பயனாளிகளுக்குச் சென்று சேரும் எனும் கருத்து வலுப்பெறத் தொடங்கியது.

மக்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவது என்பது, நிர்வாக ரீதியான சிக்கல்களைக் குறைக்கவும், மக்களின் சுதந்திரத்தை அதிகரிக்கவும் உதவும் என்று ஒரு தரப்பினர் கூறினர். நவதாராளமய பொருளாதாரக் கோட்பாடுகளைப் பின்பற்றும் அரசுகள், செலவைக் குறைப்பதற்காகவும், பொருளாதாரத்தில் சந்தையின் பங்கை விரிவுபடுத்தவும் இந்த வியூகத்தைப் பயன்படுத்துகின்றன என்று இன்னொரு தரப்பினர் வாதிடத் தொடங்கினர்.

இலவசக் கல்வி மற்றும் மருத்துவ வசதிகள், மானிய விலையில் அரிசி, இலவச மதிய உணவு, சிறுபிள்ளைகளுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் (ICDS) வழியே ஊட்டச்சத்து இவற்றையெல்லாம் அரசே வழங்குவதற்குப் பதிலாக, தங்களுக்குத் தேவையான பொருட்களையும் சேவைகளையும் சந்தையில் மக்களே பெற்றுக்கொள்ள வழி செய்வதே சிறந்தது எனும் நிலைப்பாட்டையே அரசு மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சிகளும் எடுக்கத் தொடங்கியுள்ளன. இதைச் சாத்தியப்படுத்துவதற்கான கருவியாக அனைவருக்குமான அடிப்படை வருமானம் பார்க்கப்படுகிறது.

இதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? மக்கள்நலனை உறுதிசெய்யும் பொறுப்பைச் சந்தையிடம் ஒப்படைத்துவிட்டு விலகிக்கொள்ள அரசு முயல்கிறதா? இல்லை உண்மையிலேயே மக்கள் மீதுள்ள அக்கறையின் காரணமாக அவர்களுக்கு அடிப்படை வருமானம் ஒன்றைத் தருவது நியாயமான நடவடிக்கையாக இருக்கும் என்று அரசு நம்புகிறதா?

கடந்த இருபது ஆண்டுகளில், இந்தியாவின் சமூகப் பாதுகாப்பு, சமூகநலன் கட்டமைப்பு நன்கு பரிணமித்து இருப்பதாகவும், அதனை வலுப்படுத்துவதே மக்கள்நலன் விரும்பும் அரசின் கடமையாக இருக்க வேண்டும் என்று ஜான் திரேஸ் போன்ற பொருளாதார அறிஞர்கள் தங்கள் கருத்தை அழுத்தமாகத் தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், ‘மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புச் சட்டம் உடல் வலிமை இல்லாதவர்களுக்குப் பெரிதும் உதவுவது இல்லை; உணவுப் பாதுகாப்புச் சட்டம் மக்களின் உணவு அல்லாத மற்ற தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள உதவுவதில்லை. பல்வேறு வறுமையொழிப்புத் திட்டங்கள் இருந்தும் அவை சரியாகச் செயல்படுவதே இல்லை. அதனால், அனைவருக்குமான அடிப்படை வருமானத்தை நாட்டு மக்களின் உரிமையாக்கி, அவர்களுடைய வாழ்வாதாரம், வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கான நேரம் கனிந்துவிட்டது’ என்று பிரணாப் பர்தன் போன்ற பொருளாதார நிபுணர்கள் மிகவும் உறுதியாக நம்புகின்றனர்.

அறிவுபூர்வமான விவாதங்கள் முற்போக்கான நலத்திட்டங்களுக்கு வழி செய்தால் மகிழ்ச்சிதான்!

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 1

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 2

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 3

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 4

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 5

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 6

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 7

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 8

.

.

மேலும் படிக்க

.

திருப்பரங்குன்றம்: முதல்வர் நடத்திய அவசர மீட்டிங்!

.

டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்!

.

சினி டிஜிட்டல் திண்ணை: பாழடைந்து கிடக்கும் பிக் பாஸ் வீடு!

.

தேர்தல் களம்: கிங் மேக்கர்களும் கிங்குகளும்!

.

அனைவரும் சேர்ந்துதான் ஆட்சியைக் கவிழ்க்க முடியும்: தினகரன்

.

.

.

.

மேலும் படிக்க

.

திருப்பரங்குன்றம்: முதல்வர் நடத்திய அவசர மீட்டிங்!

.

டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்!

.

சினி டிஜிட்டல் திண்ணை: பாழடைந்து கிடக்கும் பிக் பாஸ் வீடு!

.

தேர்தல் களம்: கிங் மேக்கர்களும் கிங்குகளும்!

.

அனைவரும் சேர்ந்துதான் ஆட்சியைக் கவிழ்க்க முடியும்: தினகரன்

.

.

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon