மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

பணப்பட்டுவாடா: அதிமுக திட்டத்தில் மாற்றம்?

பணப்பட்டுவாடா: அதிமுக திட்டத்தில் மாற்றம்?

நான்கு தொகுதிகளிலும் இடைத் தேர்தல் பிரச்சாரம் களைக்கட்டியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவதால் நான்கு தொகுதிகளிலும் திருவிழாக் கூட்டம்போல மக்கள் கூடுவதைக் காண முடிகிறது. இருப்பினும் நான்கு தொகுதிகளிலும் தற்போது ஹாட் டாபிக்காக இருப்பது எந்தக் கட்சி எவ்வளவு பணம் கொடுக்கும் என்பதுதான்.

நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்தவுடனேயே தனது திட்டமிடுதலைத் தொடங்கிவிட்டது ஆளுங்கட்சி. வாக்காளர்களுக்கு ரூ.4,000 வீதம் பணம் கொடுத்தால் எளிதில் வெற்றிபெற்றுவிடலாம் என்ற திட்டத்தில் இருந்திருக்கிறது அதிமுக தலைமை. இந்த நிலையில் நான்கு தொகுதிகளிலும் பணியாற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் 20 நாட்களாகக் களத்திலிருந்து தாங்கள் கண்ட அனுபவங்களையும், உண்மையான நிலவரங்களையும் முதல்வரிடம் சொல்லியிருக்கிறார்கள்.

அதாவது, மக்கள் நம் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். நாம் எவ்வளவுதான் பணம் கொடுத்தாலும், அது நமக்கு வாக்காக மாறுமா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். அதனால் ஓட்டுக்கு ரூ.4,000 கொடுக்கும் திட்டத்திலிருந்து பின்வாங்கிய அதிமுக, தற்போது நான்கு தொகுதிகளிலும் ஓட்டுக்கு ரூ.2,000 கொடுத்துவருவதாகக் கூறுகிறார்கள்.

அரவக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் பசையுள்ள வேட்பாளர் நிறுத்தப்பட்டிருக்கிறார். அதனால் திமுக தரப்பு வாக்காளர்களுக்கு ரூ.2,500 வரை கொடுக்கத் தயாராகிவிட்டது. அமமுக தரப்பிலிருந்து வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது தொடர்பாக இதுவரை முடிவு செய்யப்படவில்லை. ரூ.1,000 வரை தரலாம் என்று கூறுகிறார்கள் அமமுக நிர்வாகிகள்.

திருப்பரங்குன்றம், சூலூர் தொகுதிகளிலும் அதிமுக ஏற்கனவே முடிவு செய்தபடி ரூ.2,000, திமுக ரூ.1,000 எனக் கொடுக்கவுள்ளதாகக் கூறுகிறார்கள் உள்ளூர் நிர்வாகிகள். அமமுகவோ தொகுதிக்கு ஏற்றவாறு 1,000, 2,000 எனக் கொடுத்துவருகிறதாம். ஓட்டப்பிடாரத்தைப் பொறுத்தவரை அதிமுகவும், அமமுகவும் ஓட்டுக்கு 2,000 வரை விநியோகம் செய்திருக்கிறார்கள்.

ஓட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் பணிகள் தொடர்பாக தேர்தல் பொறுப்பாளர் கே.என்.நேரு, கனிமொழி இருவரும் நேற்று மே 12ஆம் தேதி தூத்துக்குடி சத்யா ஹோட்டலில் பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்களை அழைத்துக் கூட்டம் நடத்தியுள்ளனர். “வாக்குகளைச் சிதறாமல் திமுகவுக்குக் கொண்டுவந்து சேர்க்க வேண்டும். வாக்காளர்களுக்குக் கொடுக்க வேண்டியதைச் சரியாகக் கொடுங்கள்” என்று பேசியவர்கள், தற்போது தொகுதியில் உள்ள பொறுப்பாளர்கள் யாரும் வெளியூர் செல்லக் கூடாது. வரும் 17ஆம் தேதி வரை தொகுதியில்தான் இருக்க வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறார்கள்.

இதுபோலவே முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக நிர்வாகிகள் யாரும் பிரச்சாரம் முடியும் வரை தொகுதியை விட்டு வெளியேறக் கூடாது என்று நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

.

.

மேலும் படிக்க

.

திருப்பரங்குன்றம்: முதல்வர் நடத்திய அவசர மீட்டிங்!

.

டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்!

.

சினி டிஜிட்டல் திண்ணை: பாழடைந்து கிடக்கும் பிக் பாஸ் வீடு!

.

தேர்தல் களம்: கிங் மேக்கர்களும் கிங்குகளும்!

.

அனைவரும் சேர்ந்துதான் ஆட்சியைக் கவிழ்க்க முடியும்: தினகரன்

.

.

.

.

மேலும் படிக்க

.

திருப்பரங்குன்றம்: முதல்வர் நடத்திய அவசர மீட்டிங்!

.

டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்!

.

சினி டிஜிட்டல் திண்ணை: பாழடைந்து கிடக்கும் பிக் பாஸ் வீடு!

.

தேர்தல் களம்: கிங் மேக்கர்களும் கிங்குகளும்!

.

அனைவரும் சேர்ந்துதான் ஆட்சியைக் கவிழ்க்க முடியும்: தினகரன்

.

.

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon