மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020

விட்டுக்கொடுத்துவிடாத வெற்றி!

விட்டுக்கொடுத்துவிடாத வெற்றி!

ஒரு கப் காபி!

ஐபிஎல் தொடரின் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியை 32,000-க்கும் அதிகமானோர் மைதானத்தில் அமர்ந்து பார்த்தனர். கடைசி ஓவரின்போது பார்வையாளர்கள் அத்தனை பேரும் வெற்றிக்காகப் பிரார்த்திக்கத் தொடங்கிவிட்டனர்.

குறைவான இலக்கைத் துரத்திய சென்னை அணிக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தன. ஆனால், மும்பை அணிதான் கோப்பையை வென்றது. எந்த நேரத்திலும் வெற்றிக்கான போராட்டத்தை முடித்துக்கொள்ளாத அந்த அணியின் குணம் கவனிக்கத்தக்கது.

ஜென் கதை ஒன்று இந்த இடைவிடாத போராட்டம் பற்றி விளக்குகிறது.

ஒரு நாடு இன்னொரு நாட்டை முற்றுகையிட்டுத் தாக்கியது. இரு நாட்டுப் படைகளுக்கிடையே வெகு மும்முரமாக சண்டை நடந்துகொண்டிருந்தது.

தாக்க வந்த படையின் கை ஓங்கியது. தாக்குதலுக்கு உள்ளான நாட்டின் படை கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை. ஆனாலும், அந்தப் படைத் தளபதிக்குப் போரை இழக்க மாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கை. துணைத் தளபதி உள்ளிட்ட அவனது வீரர்களுக்கு அந்த நம்பிக்கை கிஞ்சித்தும் இல்லை. எல்லோரும் ஓடுவதில் குறியாக இருந்தனர்.

என்னதான் நம்பிக்கை இருந்தாலும், வீரர்கள் இல்லாமல் தனி ஆளாய் என்ன செய்ய முடியும்?

கடைசி நாள் சண்டை. போர்க்களத்துக்குப் போகும் வழியில் ஒரு கோயிலைக் கண்டார்கள்.

உடனே தளபதி வீரர்களை அழைத்து, “சரி வீரர்களே… நாம் ஒரு முடிவுக்கு வருவோம். இதோ இந்தக் கோயிலுக்கு முன் ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுகிறேன். அதில் தலை விழுந்தால் வெற்றி நமக்கே. பூ விழுந்தால் நாம் தோற்பதாக அர்த்தம். இப்படியே திரும்பிவிடுவோம். வெற்றியா, தோல்வியா... நமக்கு மேல் உள்ள சக்தி தீர்மானிக்கட்டும்… சரியா?”

“ஆ... நல்ல யோசனை… அப்படியே செய்வோம்…”

நாணயத்தைச் சுண்டினான் தளபதி. காற்றில் மிதந்து, விர்ரென்று சுழன்று தரையில் விழுந்தது நாணயம்.

தலை…!

வீரர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். வெற்றி வெற்றி என்று எக்காளமிட்டபடி போர்க்களம் நோக்கி ஓடினர். வெகு தீவிரமாகச் சண்டையிட்டனர் .

என்ன ஆச்சரியம்! அந்தச் சிறிய படை, எதிரி நாட்டின் பெரும் படையை வீழ்த்திவிட்டது!

துணைத் தளபதி வந்தான். “நாம் வென்றுவிட்டோம்… கடவுள் தீர்ப்பை மாற்ற முடியாதல்லவா…” என்றான் உற்சாகத்துடன்.

“ஆமாம்… உண்மைதான்” என்றபடி அந்த நாணயத்தைத் துணைத் தளபதியிடம் கொடுத்தான் தளபதி.

நாணயத்தின் இரு பக்கங்களிலும் தலை இருந்தது.

.

.

மேலும் படிக்க

.

திருப்பரங்குன்றம்: முதல்வர் நடத்திய அவசர மீட்டிங்!

.

டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்!

.

சினி டிஜிட்டல் திண்ணை: பாழடைந்து கிடக்கும் பிக் பாஸ் வீடு!

.

தேர்தல் களம்: கிங் மேக்கர்களும் கிங்குகளும்!

.

அனைவரும் சேர்ந்துதான் ஆட்சியைக் கவிழ்க்க முடியும்: தினகரன்

.

.

.

.

மேலும் படிக்க

.

திருப்பரங்குன்றம்: முதல்வர் நடத்திய அவசர மீட்டிங்!

.

டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்!

.

சினி டிஜிட்டல் திண்ணை: பாழடைந்து கிடக்கும் பிக் பாஸ் வீடு!

.

தேர்தல் களம்: கிங் மேக்கர்களும் கிங்குகளும்!

.

அனைவரும் சேர்ந்துதான் ஆட்சியைக் கவிழ்க்க முடியும்: தினகரன்

.

.

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon