மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

தங்க தமிழ்ச்செல்வன் அறையில் சோதனை!

தங்க தமிழ்ச்செல்வன் அறையில் சோதனை!

தங்க தமிழ்ச்செல்வன் மதுரையில் தங்கியிருந்த விடுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

அமமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும், தேனி மக்களவைத் தொகுதியின் வேட்பாளருமான தங்க தமிழ்ச்செல்வன் நேற்று (மே 12) ஆண்டாள்புரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். இந்த விடுதியிலிருந்து திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். நேற்று அவருடன் அமமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணைத் தலைவர் பாலமுருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அந்த அறையில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்கான பணம், பரிசுப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தங்க தமிழ்செல்வன் தங்கியிருந்த அறையில் சோதனை நடத்த சென்றனர்.

ஆனால், பறக்கும் படை அதிகாரிகள் விடுதிக்குச் சென்ற பொழுது தங்க தமிழ்ச்செல்வன் அந்த அறையில் இல்லை. இதனையடுத்து அந்த அறையின் சாவியை வாங்கி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த அமமுகவினரின் கார்களிலும் சோதனை நடத்தப்பட்டது. காவல்துறையினர், வருமான வரித் துறையினர், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நடந்த இந்த சோதனையில் பணம் பொருள் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக தங்க தமிழ்ச்செல்வன் தொடர்ந்து பல்வேறு கருத்துகளைக் கூறிவரும் நிலையில் அவருடைய அறையில் வருமான வரித் துறை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இந்தச் சோதனையை நடத்தியுள்ளனர்.

.

.

மேலும் படிக்க

.

திருப்பரங்குன்றம்: முதல்வர் நடத்திய அவசர மீட்டிங்!

.

டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்!

.

சினி டிஜிட்டல் திண்ணை: பாழடைந்து கிடக்கும் பிக் பாஸ் வீடு!

.

தேர்தல் களம்: கிங் மேக்கர்களும் கிங்குகளும்!

.

அனைவரும் சேர்ந்துதான் ஆட்சியைக் கவிழ்க்க முடியும்: தினகரன்

.

.

.

.

மேலும் படிக்க

.

திருப்பரங்குன்றம்: முதல்வர் நடத்திய அவசர மீட்டிங்!

.

டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்!

.

சினி டிஜிட்டல் திண்ணை: பாழடைந்து கிடக்கும் பிக் பாஸ் வீடு!

.

தேர்தல் களம்: கிங் மேக்கர்களும் கிங்குகளும்!

.

அனைவரும் சேர்ந்துதான் ஆட்சியைக் கவிழ்க்க முடியும்: தினகரன்

.

.

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon