மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020

திலகவதி படுகொலை: மார்க்சிஸ்ட் எழுப்பும் கேள்வி!

திலகவதி படுகொலை: மார்க்சிஸ்ட் எழுப்பும் கேள்வி!

விருத்தாசலம் மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷின் வாக்குமூல வீடியோவைக் காவல் துறை வெளியிட்டது ஏன் என மார்க்சிஸ்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் கல்லூரி மாணவி திலகவதி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக ஆகாஷ் என்னும் இளைஞனை கைது செய்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட திலகவதி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், கொலை செய்ததாக குற்றம்சாட்டப்படும் ஆகாஷ் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் அப்பகுதியில் சாதி மோதல் பதற்றம் நீடித்து வருகிறது. இதுதொடர்பாக ஆகாஷ் காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூல வீடியோவை நாம் வெளியிட்டிருந்தோம். அது சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவி வருகிறது.

இதுதொடர்பாக சிதம்பரத்தில் நேற்று (மே 12) செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “திலகவதி படுகொலை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வீட்டிலிருக்கும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லையெனில் வெளியில் சென்றுவரும் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும். கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவருகின்றன. பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல்தான் தமிழகத்தில் உள்ளது” என்று குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து, “இவ்வழக்கில் ஆகாஷ் என்னும் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியதாக காவல் துறையே வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. ஒருவேளை அவர் கொலை செய்திருக்கலாம். காவல் துறை அவரிடம் வாக்குமூலம் வாங்கியும் இருக்கலாம். அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கலாமே. வாட்ஸ் அப்பில் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது? நாளைக்கே அந்த இளைஞர் கட்டாயத்தின் பேரில்தான் வாக்குமூலம் பெற்றதாகக் கூறினால் காவல் துறை என்ன செய்யும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர்கள் இருவரும் விரும்பினார்கள் என்றும், மாணவியைக் கொலை செய்ய வேண்டிய அவசியம் தனது மகனுக்கு இல்லை என்றும் அந்த இளைஞரின் தந்தை புகார் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள் என்று கூறிய பாலகிருஷ்ணன், “இரண்டு மாறுபட்ட கருத்துகள் வருவது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்களைப் பொறுத்தவரை மாணவி திலகவதியை யார் கொலை செய்திருந்தாலும், அவர்கள் எந்த சாதி, மதமாக இருந்தாலும் உண்மைக் குற்றவாளியைக் கண்டறிந்து கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார். மேலும், மாணவியின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்றவர், கொலை தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

.

.

மேலும் படிக்க

.

திருப்பரங்குன்றம்: முதல்வர் நடத்திய அவசர மீட்டிங்!

.

டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்!

.

சினி டிஜிட்டல் திண்ணை: பாழடைந்து கிடக்கும் பிக் பாஸ் வீடு!

.

தேர்தல் களம்: கிங் மேக்கர்களும் கிங்குகளும்!

.

அனைவரும் சேர்ந்துதான் ஆட்சியைக் கவிழ்க்க முடியும்: தினகரன்

.

.

.

.

மேலும் படிக்க

.

திருப்பரங்குன்றம்: முதல்வர் நடத்திய அவசர மீட்டிங்!

.

டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்!

.

சினி டிஜிட்டல் திண்ணை: பாழடைந்து கிடக்கும் பிக் பாஸ் வீடு!

.

தேர்தல் களம்: கிங் மேக்கர்களும் கிங்குகளும்!

.

அனைவரும் சேர்ந்துதான் ஆட்சியைக் கவிழ்க்க முடியும்: தினகரன்

.

.

திங்கள், 13 மே 2019

chevronLeft iconமுந்தையது