மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 11 ஆக 2020

இன்று ஆறாம் கட்ட வாக்குப்பதிவு!

இன்று ஆறாம் கட்ட வாக்குப்பதிவு!

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 425 தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. இன்னும் மீதமுள்ள 118 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக மே 12 (இன்று), மே 19 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

அவ்வகையில் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நாளான இன்று உத்தரப் பிரதேசத்தின் 14 மக்களவை தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், பிகாரில் 8 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 8 தொகுதிகள், ஹரியானாவில் 10 தொகுதிகள், டெல்லியில் 7 தொகுதிகள், ஜார்கண்டில் 4 தொகுதிகள் என மொத்தம் 59 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 11ஆம் தேதியன்று திரிபுரா மாநிலத்தில் சில வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடைபெற்றதாகப் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திரிபுராவில் 168 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 59 மக்களவைத் தொகுதிகளில் 979 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புக்காகக் கூடுதல் பாதுகாப்புப் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று நடைபெறும் வாக்குப்பதிவில் மூன்று முன்னாள் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் தற்போதைய எம்.பி.யாக அகிலேஷின் தந்தை முலாயம் சிங் யாதவ் பொறுப்பு வகிக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக மத்திய அமைச்சர் மேனகா காந்தி போட்டியிடுகிறார். இதே தொகுதியில் அவரது மகன் வருண் காந்தி ஏற்கெனவே வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகச் சர்ச்சைக்குரிய சாத்வி பிரக்யா சிங் தாகூர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பாக திக்விஜய் சிங் போட்டியிடுகிறார்.

டெல்லியில் வடகிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீக்‌ஷித் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக வேட்பாளராக தற்போதைய எம்.பி மனோஜ் திவாரி போட்டியிடுகிறார். தெற்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஒலிம்பிக் பதக்கம் வென்ற விஜேந்திர சிங் போட்டியிடுகிறார். கிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்.

.

.

மேலும் படிக்க

.

டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்!

.

தேர்தல் களம்: கிங் மேக்கர்களும் கிங்குகளும்!

.

அனைவரும் சேர்ந்துதான் ஆட்சியைக் கவிழ்க்க முடியும்: தினகரன்

.

பெரம்பலூர்: வழக்கறிஞர் அருளின் கம்ப்யூட்டரைக் கைப்பற்ற காவல்துறை முயற்சி!

.

டைம் இதழ் அட்டைப்படம்: பாஜக கண்டனம்

.

ஞாயிறு, 12 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon