மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 10 மே 2019

ஒருமை – பன்மை: மேலும் சில விதிகள்!

ஒருமை – பன்மை: மேலும் சில விதிகள்!

ஒரு சொல் கேளீரோ! – 4: அரவிந்தன்

ஒருமை – பன்மை விஷயத்தில் சில முக்கியமான விதிகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

ஒவ்வொரு என்று வந்தால் அதன் பிறகு ஒருமைதான் வர வேண்டும்.

எடுத்துக்காட்டு:

ஒவ்வொரு மாணவரும், ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு நாளும் –சரி.

ஒவ்வொரு நூல்களும்… - தவறு.

எல்லா என்று வந்தால் பன்மை வர வேண்டும்.

எடுத்துக்காட்டு:

எல்லா உறுப்பினர்களும், எல்லா வீடுகளுக்கும், எல்லா அரசியல்வாதிகளையும் – சரி

எல்லா உண்மையும், எல்லா நாட்டிலும், எல்லாப் பிரதமரும் – தவறு

எந்த என்று வந்தால் அதன் பிறகு ஒருமை வர வேண்டும்

எடுத்துக்காட்டு: எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்

தவறும் இடங்கள்

உள்ளது, இருக்கிறது என்னும் சொற்களின் ஒருமை – பன்மை வடிவங்கள் சில சமயங்களில் சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை.

நிறைய பிரச்சினைகள் உள்ளது.

அங்கு கிழிந்த துணிகள் குவிந்திருக்கிறது.

இரண்டு உதாரணங்களிலுமே உள்ளன, இருக்கின்றன எனப் பன்மை பயன்படுத்தப்பட வேண்டும். பிரச்சினைகள், துணிகள் ஆகியவை பன்மை என்பதைக் கவனியுங்கள்.

புத்தகம், மேசை இரண்டும் அங்கே உள்ளது.

இந்த உதாரணத்தில் ஒரே பொருளின் பன்மை இல்லை. அதாவது, புத்தகங்கள், மேசைகள் என இல்லை. ஆனால், புத்தகம், மேசை இரண்டும் என்று சொல்லும்போது பன்மை வந்துவிடுகிறது. எனவே, உள்ளன அல்லது இருக்கின்றன என எழுத வேண்டும்.

புத்தகம், மேசை ஆகியவை அங்கே உள்ளன.

என்னும் எடுத்துக்காட்டையும் கவனத்தில் கொள்ளலாம்.

நினைவில் கொள்க:

ஒரு வாக்கியத்தின் வினையானது யாருக்கு / எதற்குப் பொருந்துகிறதோ அதைப் பொறுத்து ஒருமை / பன்மை தீர்மானிக்கப்பட வேண்டும்.

(தொடரின் அடுத்த பகுதி வரும் திங்களன்று)

தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கான தேடல்

மொழியில் இருக்க வேண்டிய நெகிழ்வு!

ஒருமை – பன்மை மயக்கம் எப்படி ஏற்படுகிறது?

.

.

மேலும் படிக்க

.

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- எடப்பாடி: சமரச தூதர் யார்?

.

சசிகலாவுக்குத் தூதுவிட்ட எடப்பாடி பழனிசாமி

.

காங்கிரஸுக்கு தூதுவிடும் தெலங்கானா முதல்வர்!

.

தேனி விவகாரம்: பன்னீர் பதில்!

.

ரஞ்சன் கோகாய்: குற்றச்சாட்டும் விசாரணை நடைமுறையும்

.

வெள்ளி, 10 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon