மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 23 ஜன 2020

கிச்சன் கீர்த்தனா: இஞ்சி - எலுமிச்சை மிக்ஸ்

கிச்சன் கீர்த்தனா: இஞ்சி - எலுமிச்சை மிக்ஸ்

சுற்றுலா ஸ்பெஷல்: பயணத் துணைவன்

கொளுத்தி எடுக்கிற கோடை வெயிலில் சில சுற்றுலாத் திட்டங்கள் குளுமையாக அமைந்துவிடும்; கொண்டாட்ட நினைவுகளாகவே மாறிவிடும். அன்றாட அவசரங்களை, பணிச்சுமையை, பிரச்சினைகளை தற்காலிகமாக மறந்துவிட்டு, மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும் நல் மருந்து சுற்றுலா. இந்தச் சுற்றுலா நாட்களை மேலும் மகிழ்ச்சியாக மாற்றும் இந்த இஞ்சி - எலுமிச்சை மிக்ஸ்.

என்ன தேவை?

இளசான இஞ்சி - ஒரு டேபிள் ஸ்பூன் (தோல் சீவி பொடியாக நறுக்கியது)

சீரகம் - 2 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - ஒரு டீஸ்பூன்

எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

ஒரு கிண்ணத்தில் இஞ்சி, சீரகம், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, எலுமிச்சைச் சாறு விட்டு நன்கு கலக்கவும். இதனை 4 - 5 நாட்கள் வெயிலில் நன்றாகக் காயவைத்து எடுத்து, சேமித்து வைத்து பயணங்களின்போது பயன்படுத்தவும்.

என்ன பலன்?

பயணத்தின்போது ஏற்படும் வயிற்றுப் பொருமல், அஜீரணம் ஆகியவற்றுக்கு இதைச் சிறிது எடுத்து சாப்பிடலாம். நல்ல நிவாரணம் கிடைக்கும்.

நேற்றைய ரெசிப்பி: ரயில் இட்லி

வியாழன், 9 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon