மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 19 பிப் 2020

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பா? மும்முனை வியூகம்!

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பா? மும்முனை வியூகம்!

மொபைல் டேட்டா ஆன் செய்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் இருந்தது. டைப்பிங் என்றபடியே சில நிமிடங்கள் கடக்க மெசேஜ் வந்து விழுந்தது.

“மக்களவைத் தேர்தல், மினி சட்டமன்றத் தேர்தல் என இரண்டு பெரும் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து தமிழகமே காத்திருக்கும் வேளையில் திமுக, அதிமுக,அமமுக ஆகிய மூன்று கட்சிகளும் தங்களது வியூகத்தில் தீவிரமாக இருக்கின்றன.

திமுக தலைவர் ஸ்டாலின் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிகபட்ச தொகுதிகளில் திமுக வெற்றிபெறுமென்று உறுதியாக நம்புகிறார். நான்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரக் களத்துக்கு இடையே, தனக்கு நெருக்கமானவர்களிடம் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகான வியூகத்தைப் பற்றி ஆலோசித்து வருகிறார் ஸ்டாலின்.

ஏற்கனவே ஜுன் 3 ஆம் தேதி திமுக ஆட்சி அமைக்கும் என்று இடைத்தேர்தல் களத்திலேயே வெளிப்படையாக ஸ்டாலின் பேசிவிட்ட நிலையில், திமுக தலைமைக்கு நெருக்கமானவர்கள் திமுக அமைச்சரவை அமைந்தால் யார் யார் அமைச்சர்கள் என்ற ரேஞ்சுக்கு ஆலோசிக்கத் தொடங்கிவிட்டனர்.

அதேநேரம் ஸ்டாலினிடம் கருத்துகளை முன் வைத்துப் பேசும் சிலர் அவரிடம் சில கேள்விகளையும் கேட்டிருக்கிறார்கள். ‘நம்பர் கேமில் ஆட்சியைக் கவிழ்த்து மீண்டும் முதல்வராவது தனக்கு இஷ்டமில்லைனு தினகரன் சொல்றாரு. உங்களோட ஒப்பிடும்போது அவர் அரசியல்ல ரொம்ப ஜூனியர். அவரே அப்படி சொல்லும்போது நீங்க இந்த நம்பர் கேம் மூலமா ஆட்சியப் பிடிச்சு முதல்வராக வர்றது நல்லா இருக்குமா? கலைஞருக்கு அடுத்து திமுகவின் தலைவரான நீங்க பொதுத் தேர்தல் மூலமாக முதல்வரா வந்தால்தானே நல்லா இருக்கும்?’ என்ற கேள்விதான் அது. இந்தக் கேள்வியை நன்கு உள் வாங்கிக்கொண்ட ஸ்டாலின்,

‘நீங்க சொல்றது சரிதான் .ஆனால் திமுகவில் இப்போது 89 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். அவர்களின் பெரும்பாலோனோரின் எண்ணம், திமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதை நழுவ விடக்கூடாது என்பதுதான். ஒருவேளை நாம் தேர்தலில் நின்று வெல்வோம் என்று முடிவெடுத்தால் அது சில திமுக எம்எல்ஏக்கள் மனதை அதிமுக மாற்றும் அளவுக்கு கூட போக நேரிடலாம். அதனால் திமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு வரும் பட்சத்தில் மீதமிருக்கும் இரண்டு வருட கால சிறப்பான ஆட்சியை நடத்தி அதன் பிறகு பொதுத் தேர்தலை சந்தித்து கொள்ளலாம்’என்று சொல்லி இருக்கிறாராம்.

ஸ்டாலின் கணக்கு இப்படி என்றால் தினகரன் வியூகம் ஆட்சிக் கவிழ்ப்பு என்பதில் தெளிவாக இருக்கிறது. ‘தங்கம் ஒரு வார்த்தை சொன்னவுடன் எடப்பாடி குதிக்கிறாரு பாத்தீங்களா? அவருக்கு பயம் இருக்கு. சட்டமன்றத் தேர்தல்ல திமுக 18 இடம் ஜெயிக்கும். அமமுக 4 இடம் ஜெயிக்கும். அதிமுக ஒரு இடம் கூட ஜெயிக்காது. அதனால் ஆட்சி கவிழும். ஸ்டாலின் முதல்வரானால் கூட அவர் மேல் அதிருப்தி அதிகமாகும். அது அடுத்த பொதுத் தேர்தலில் நமக்கு இன்னும் லாபமாகும்’ என்று சொல்லிவருகிறார் தினகரன்.

எடப்பாடி பழனிசாமியோ தினம்தினம் இதுபற்றி ஆலோசனையில்தான் இருக்கிறார். அவருக்கு கிடைத்திருக்கும் உளவுத்துறை தகவலின்படி 22 இடங்களில் அதிகபட்சம் 12 இடங்கள் அதிமுகவுக்கு வந்துவிடும் என்பதுதான். வேலுமணி தங்கமணி போன்றவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் எடப்பாடி” நாம் இங்கே சட்டமன்றத்தில் மெஜாரிட்டி பெற்றுவிட்டால் மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் நமக்கு கவலை இல்லை. ஒருவேளை காங்கிரசே வந்தால் கூட நாம் பெரும்பான்மையோடு இருக்கிற பட்சத்தில் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லிவருகிறார் எடப்பாடி” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

.

மேலும் படிக்க

.

டிஜிட்டல் திண்ணை: தினகரனிடம் ஏமாந்த எடப்பாடி

.

திருப்பரங்குன்றம்: மலையேறப் போவது யார்?

.

நீட்: கல்வி வணிகர்கள் விரிக்கும் வலை!

.

அமமுகவில் இணைந்த கொங்கு பாமக பிரமுகர்கள்!

.

தேனிக்கு திடீர் இயந்திரங்கள்: ஓ.பன்னீர் மகனை ஜெயிக்க வைக்க முயற்சியா?

புதன், 8 மே 2019

அடுத்ததுchevronRight icon