மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 19 நவ 2019

ஏழு கதாநாயகிகள் நடிக்கும் ‘7’!

ஏழு கதாநாயகிகள் நடிக்கும் ‘7’!

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய நிசார் ஷஃபி இயக்குநராக அறிமுகமாகும் ‘7’ படத்தில் ரெஜினா, நந்திதா ஸ்வேதா உட்பட ஏழு கதாநாயகிகள் நடித்திருக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகும் இப்படம் ஒரு விசாரணைத் திரில்லராக உருவாகியிருக்கிறது. இயக்குநர் நிசார் ஷஃபி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், "இந்தப் படத்தில் ஏழு முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளன, மேலும் கதையை நகர்த்தும் ஏழு பெண் கதாபாத்திரங்களும் இருக்கும். அதனால் தான் ‘7’ என தலைப்பிட்டிருக்கிறோம்.

காணாமல் போன கணவனை கண்டுபிடித்து தருமாறு பல்வேறு பெண்கள் புகார் அளிக்கின்றனர். அவர்களது அனைத்து புகாரும் பார்த்திபன் என்ற ஒரே கதாபாத்திரத்தை குறித்துதான் முன்வைக்கப்படுகின்றன என தெரிய வருகிறது. வழக்கை விசாரிக்கும் அதிகாரியான நடிகர் ரஹ்மான், மர்மத்தின் முடிவை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது தான் கதையே” என்று தெரிவித்துள்ளார்.

ரெஜினா, நந்திதா ஸ்வேதா , அனிஷா ஆம்ப்ரோஸ், சுனிதா சவுதரி, அதிதி ஆர்யா, பூஜிதா பொன்னாடா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர். 7ஆவது கதாநாயகியாக நடிக்கவுள்ள நடிகையின் பெயரை சஸ்பென்ஸ் கருதி தற்போது வெளியிடாமல் உள்ளனர்.

தெலுங்கு நடிகர் ஹவிஷ், பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சைத்தன் பரத்வாஜ் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரவீன் கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தை ஸ்ரீ கிரீன் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

வெள்ளி, 3 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon