மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

வட இந்தியர்களை வெளியேற்றுவோம்: போராட்டத்தில் மணியரசன்

வட இந்தியர்களை வெளியேற்றுவோம்:  போராட்டத்தில் மணியரசன்

’வந்தவன் எல்லாம் சுரண்டிப் பிழைக்க தமிழ்நாடென்ன திறந்த வீடா ?’ என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களோடு தமிழ்நாட்டு வேலை தமிழருக்கே என்ற போராட்டத்தை இன்று (மே 3) திருச்சியில் முன்னெடுத்திருக்கிறது தமிழ் தேசிய பேரியக்கம்.

மத்திய அரசின் ரயில்வே துறை உட்பட பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டில் இருக்கும் வேலை வாய்ப்புகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு திட்டமிட்டே மறுக்கப்பட்டு, வட நாட்டினருக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து தமிழ்நாட்டு வேலை தமிழருக்கே என்ற முன் முழக்கத்தோடு இன்று திருச்சி பொன்மலை ரயில்வே தொழிற்சாலை முன் தமிழ் தேசியப் பேரியக்கம் சார்பில் ஆயிரக்கணக்கானோர் திரண்ட போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் பேசிய தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன், “ தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசின் 18 துறைகளிலும் இந்திக்காரர்களையும், மற்ற வெளி மாநிலத்தவர்களையும் 90% என்ற அளவில் பணியமர்த்தி வருகின்றனர். இனப் பாகுபாடு காட்டி தமிழர்களை தங்கள் சொந்த மாநிலத்தில் கூட தகுதியிருந்தும் பணியில் அமர்த்தாமல் புறக்கணிக்கின்றனர். எனவே தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசின் அலுவலகங்களில் பத்து சதவிகிதத்துக்கும் மேல் உள்ள வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும். தமிழகத்தில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்குவதில் தமிழர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்” என்று வலியுறுத்தியவர்,

“இன்று வாயிலில் நின்று மறியல் போராட்டம் செய்கிறோம். இது இத்தோடு முடியாது. அடுத்த கட்டமாக தமிழகத்தில் பணியாற்றும் வெளிமாநிலத்தவர்களின் கையைப் பிடித்து வெளியே இழுத்து வருவோம். இதில் வன்முறை இருக்காது. ஆனால் அவர்களை கையைப் பிடித்து வெளியே இழுத்து வருவோம்.

இதுமட்டுமல்ல ஒவ்வொரு நாளும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கில் இறங்கிவருகிறார்களே வட மாநிலத் தொழிலாளர்கள். அவர்களை அங்கிருந்தபடியே திருப்பி அனுப்பும் போராட்டத்தை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடத்துவோம்” என்று எச்சரித்தார் பெ. மணியரசன்.

வெள்ளி, 3 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon