மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

தேர்தலுக்குப் பின் மோடியின் பயோபிக்!

தேர்தலுக்குப் பின் மோடியின் பயோபிக்!

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட‘பிஎம் நரேந்திர மோடி’ படம் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் நாளுக்கு அடுத்த நாள் இந்தியா முழுவதும் திரையிடப்படும் என அதன் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படங்களை மக்களவைத் தேர்தல் முடியும் வரை வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் தடைவிதித்திருந்தது. இந்த தடைக்கு எதிராக ‘பிஎம் நரேந்திரமோடி’ படத்தின் தயாரிப்பாளர் சந்தீப் வினோத்குமார் சிங் மனுதாக்கல் செய்தார். ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த அவ்வழக்கில் உச்ச நீதிமன்றம், மக்களவைத் தேர்தல் முடியும் வரை படத்தை வெளியிட தடைவிதித்தது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றியமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இன்று காலை ‘பிஎம் நரேந்திரமோடி’ படத்தின் தயாரிப்பாளர் சந்தீப் வினோத்குமார் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் மே 24ம் தேதி படம் ரிலீஸ் ஆவதை அறிவித்து, ‘எங்களுக்கு குறுக்கே நின்ற அத்தனை தடைகளையும் கடந்து திரைக்கு வருகிறோம்’என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நரேந்திர மோடி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை ஓமங் குமார் இயக்கியுள்ளார்.

வெள்ளி, 3 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon