மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 மே 2019

நீயா2: கடும் போட்டிகளுக்கு இடையில் ஜெய்!

நீயா2: கடும் போட்டிகளுக்கு இடையில் ஜெய்!

ஜெய் நடிப்பில் உருவான நீயா 2 திரைப்படம் வரும் மே மாதம் 10ஆம் தேதி கடும் போட்டிகளுக்கிடையில் களமிறங்கவுள்ளது.

1979ஆம் ஆண்டு கமல், ஸ்ரீப்ரியா நடிப்பில் வெளியான நீயா திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. அதே கதைக்கருவோடு தற்போது தயாராகியுள்ள நீயா 2 திரைப்படத்தில் ஜெய், ராய் லக்ஷ்மி, வரலட்சுமி சரத்குமார், கேதரின் தெரஸா ஆகியோர் நடித்துள்ளனர். சுரேஷ் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஷபிர் இசையமைக்கிறார்.

நீயா 2 படத்தின் ரிலீஸ் தேதி வரும் மே 10ஆம் தேதி என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே தேதியை குறிவைத்து விஷாலின் அயோக்யா, ஜீவாவின் கீ மற்றும் அதர்வாவின் 100 திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.

ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம், காஞ்சனா 3 திரையரங்கங்களை ஆக்கிரமித்துள்ள நிலையில், தேவராட்டம், கே3 திரைப்படங்கள் இந்த வார ரிலீஸாக வந்திருக்கின்றன. மே மாதம் என்பதால் கோடை விடுமுறையை குறி வைத்து அடுத்தடுத்து படங்கள் இறங்கவுள்ளதால் தியேட்டர்கள் கிடைப்பதில் நெருக்கடி ஏற்படும் நிலையுள்ளது.

நீயா 2 அடுத்த வாரம் வெளியாகவுள்ளதால் இதன் இரண்டாவது டிரெய்லர் சற்று முன் வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

வெள்ளி 3 மே 2019