மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

சாத்தூரில் நூதன நகை திருட்டு!

சாத்தூரில் நூதன நகை திருட்டு!

கோயிலில் நகைகளை வைத்து வழிபட்டால் செல்வம் பெருகும் என்று கூறி நகை திருட்டில் ஈடுபட்ட 2 பேரைக் கைது செய்துள்ளனர் சாத்தூர் போலீசார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்தவர் நவீன்குமார். ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக இவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது. சமீபகாலமாக ஃபேஸ்புக் மூலமாக விருதுநகர் வட்டாரத்தில் உள்ள பெண்களைத் தொடர்புகொள்ளும் சிலரால் நகை திருட்டு நடைபெறுவதாகப் புகார் எழுந்தது.

இது தொடர்பான விசாரணையில், நேற்று (மே 2) நவீன்குமார் மற்றும் அவரது நண்பர் ராஜ்குமார் ஆகியோரைக் கைது செய்தனர் போலீசார். அவர்களிடம் இருந்து 3 லட்சம் ரூபாய் ரொக்கம், 61 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஃபேஸ்புக் மூலமாகப் பெண்களிடம் அறிமுகமாகிய இருவரும் பெண் குரலிலேயே அவர்களிடம் பேசி வந்துள்ளனர். குறிப்பிட்ட கோயிலில் நகைகளை வைத்து வழிபட்டால் செல்வம் பெருகும் என்று கூறி, சம்பந்தப்பட்ட பெண்களைத் தூண்டிவிட்டுள்ளனர். அவ்வாறு கோயிலுக்கு வரும் பெண்கள் நகைகளை வைத்து வழிபடும்போது, அவர்களுக்குத் தெரியாமல் நகைகளைத் திருடிக்கொண்டு தப்பியுள்ளனர். போலீசாரின் விசாரணையில் இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளன.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளி, 3 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon