மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

விக்ரம் வேதா இயக்குநர்களின் அடுத்த அறிவிப்பு!

விக்ரம் வேதா இயக்குநர்களின் அடுத்த அறிவிப்பு!

இயக்குநர்களான புஷ்கர்-காயத்ரி விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா படத்தின் வெற்றிக்குப்பின், தங்களது தயாரிப்பில் உருவாகும் புதிய பட அறிவிப்பை இன்று காலை வெளியிட்டுள்ளனர்.

வால் வாட்சர் பிலிம் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய புஷ்கர்-காயத்ரி, பட அறிவிப்புக்கு முன், தங்கள் ட்விட்டர் பக்கத்தில் அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டுள்ளனர். ‘பல ஆண்டுகளுக்கு முன்பு, இளம் படைப்பாளிகளிடமிருந்து உற்சாகமளிக்கும் சில திரைக்கதைகளை கேட்டோம். அந்த படங்களை நாங்கள் தயாரிக்க விரும்பினோம். ஆனால் அந்த சமயத்தில், எங்களிடம் அதற்கான வளமோ அல்லது அலைவரிசையோ இல்லை. இப்போது, அதற்கான நேரம் வந்துவிட்டது!’ என பதிவிட்டிருந்தனர்.

முன்னாள் உதவி இயக்குநராக புஷ்கர்-காயத்ரியிடம் பணியாற்றிய ஹலீதா ஷமீம், வால் வாட்சர் பிலிம்ஸின் முதல் படத்தை இயக்கப்போகிறார். இவர் ஏற்கனவே பூவரசம் பீப்பி என்ற படத்தை இயக்கியுள்ளார்.

‘ஏலே’ என தலைப்பிடப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கவுள்ளது. சமுத்திரக்கனி மற்றும் மணிகண்டன் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு கபீர் வாசுகி இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.

புஷ்கர்- காயத்ரியுடன் இணைந்து ஒய் நாட் ஸ்டூடியோஸ் சசிகாந்த்தும் தயாரிக்கவுள்ளார்.

வெள்ளி, 3 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon