மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 6 ஜூலை 2020

இந்திய முதலீட்டாளர்களின் டாப் சாய்ஸ் லண்டன்!

இந்திய முதலீட்டாளர்களின் டாப் சாய்ஸ் லண்டன்!

2018ஆம் ஆண்டில் இந்திய முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்த நகரமாக லண்டன் உள்ளது.

துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நகரங்களைக் காட்டிலும் இங்கிலாந்தில் கூடுதலான அளவில் இந்தியர்கள் 2018ஆம் ஆண்டில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர் என்று லண்டன் & பார்ட்னர்ஸ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியுள்ளது. 2018ஆம் ஆண்டில் இங்கிலாந்து 52 அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது. அதே சமயத்தில் அமெரிக்கா 51 முதலீடுகளையும், ஐக்கிய அரபு அமீரகம் 32 முதலீடுகளையும் ஈர்த்துள்ளதாக இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. டேக்ஸி நிறுவனமான ஓலா மற்றும் ஓட்டல் சேவை நிறுவனமான ஓயோ உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிறுவனங்கள் 2018ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளன.

இதுகுறித்து இந்த ஆய்வறிக்கையில், ‘2018ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இந்தியர்கள் மேற்கொண்ட ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீட்டில் 60 விழுக்காடு அளவுக்கு லண்டனில் மட்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டில் லண்டனில் மட்டும் 32 முதலீடுகள் இந்தியர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியர்களுடைய அந்நிய நேரடி முதலீடு கடந்த ஒரே ஆண்டில் மட்டும் லண்டனில் 255 விழுக்காடு வளர்ச்சியும், ஒட்டுமொத்த இங்கிலாந்தில் 100 விழுக்காடு வளர்ச்சியும் காணப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாகவே இந்தியர்கள் இங்கிலாந்தில் முதலீடு செய்வது மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட 2.49 பில்லியன் பவுண்டுகளை கடந்த 10 ஆண்டுகளில் இந்தியர்கள் இங்கிலாந்தில் மூலதன முதலீட்டுக்காக செலவிட்டுள்ளனர். இதன்மூலம் 5,691 வேலைகள் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

வெள்ளி, 3 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon