மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

மம்தா பானர்ஜி படத்தை வெளியிடத் தடை!

மம்தா பானர்ஜி படத்தை வெளியிடத் தடை!

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘பிஎம் நரேந்திர மோடி’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நரேந்திர மோடி கதாபாத்திரத்தில் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இப்படத்தை ஓமங் குமார் இயக்கியிருந்தார். இப்படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. எனினும் இப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துவிட்டது.

இதேபோல, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘பாகினி: பெங்கால் டைக்ரெஸ்’ என்ற படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தையும் வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தை சேர்ந்த உயரதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இப்படத்தை மே 19ஆம் தேதி வரை வெளியிடக்கூடாது என படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.

மேலும் இணையத்தில் வெளியாகியுள்ள படத்தின் ட்ரெய்லரை மே 19ஆம் தேதி வரை நீக்கும்படி அறிவுறுத்தியுள்ளோம். இவ்விவகாரம் குறித்து தயாரிப்பாளர் தரப்பில் கருத்துகளை கேட்டோம். அவரும் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு வந்து ஆணையத்தின் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்க விரும்புவதாக தெரிவித்தார்” என்று கூறினார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்தும் திரைப்படங்களும், வெப்சீரிஸ்களும் உருவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 3 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon