மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 3 ஜூலை 2020

சர்வதேச அரசியலில் தினேஷ்

சர்வதேச அரசியலில் தினேஷ்

பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி படம் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் தினேஷ். பிறகு சில சவால் நிறைந்த கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். விசாரணை, குக்கூ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதுடன் தினேஷுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் இருந்தன.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் நடித்த பரியேறும் பெருமாள் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்திருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படத்தை பா.ரஞ்சித் தயாரித்துள்ளார். இந்தப் படத்தை அதியன் ஆதிரை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கதாநாயகனாக தினேஷ் நடித்துள்ளார். இந்தப் படம் தனது சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படம் என்று தினேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டி.என்.என் ஊடகத்திடம் பேசிய தினேஷ், “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தை உலகின் எந்த நிலப்பகுதியுடனும் தொடர்புபடுத்தி பார்க்க முடியும். இந்தப் படம் சர்வதேச அரசியல் பற்றி பேசுகிறது. அதே சமயத்தில் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாகவும் வெளிவருகிறது.

வடக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஒரு லாரி ஒட்டுநர் கதாபாத்திரத்தில் நடித்தது முற்றிலும் வேறுபட்ட அனுபவமாக இருந்தது. தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய திரைத் துறைகளிலிருந்து எனக்கு வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், எனக்குப் பிடித்த கதைகளில் மட்டுமே நான் ஆர்வம்காட்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 3 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon