மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 1 டிச 2020

ஜெயம் ரவியின் ‘கோமாளி’ அப்டேட்!

ஜெயம் ரவியின் ‘கோமாளி’ அப்டேட்!

நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் 24ஆவது படமாக வரவிருக்கும் கோமாளி படத்தின் டைட்டில் போஸ்டர் நேற்று (மே 2) மாலை வெளியானது.

அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சம்யுக்தா ஹெக்டே மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

“படத்தில் ஒரு பெரிய காலகட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் இடம்பெறும், அதனால் அவர் வெவ்வேறு காலகட்டத்தில் ஒன்பது வெவ்வேறு தோற்றத்தில் காணப்படுவார்” என இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்கள் கபிலன் வைரமுத்து. இந்தப் படத்தைக் கோடை விடுமுறைக்குப் பின் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

வெள்ளி, 3 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon