மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 25 ஜன 2020

பொறியியல் கலந்தாய்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

பொறியியல் கலந்தாய்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

2019-20ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும் 550க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் லட்சக்கணக்கான பொறியியல் இடங்கள் நிரப்பப்படவுள்ளன. கடந்த ஆண்டு வரை அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வை நடத்தி வந்த நிலையில் இந்த ஆண்டு முதல் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் கலந்தாய்வை நடத்தவுள்ளது.

இந்த நிலையில் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க முதல் நாள் : 2/5/19

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31/5/19

ரேண்டம் நம்பர் வெளியிடும் நாள்: 3/6/19

தரவரிசை பட்டியல் வெளியிடும் நாள்: 17/6/19

மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு தொடங்கும் நாள்: 20/6/19

ஜூலை 3ஆம் தேதி முதல் ஜூலை 30ஆம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

கடந்த ஆண்டு முதல் தமிழகத்தில் 42 இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உதவி மையங்கள் வாயிலாகவும்,ஆன்லைன் மூலமும் கலந்தாய்வு நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டும் அதே முறையில் கலந்தாய்வு நடைபெறும். மாணவர்கள் வங்கிகள் அல்லது ஆன்லைன் மூலமாக விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம் என்று உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

வங்கிகள் மூலம் கட்டணத்தைச் செலுத்த விரும்புவோர், 1/5/19 பிறகான வரையோலையைப் பெற்று, ‘The secretary, TNEA’ payable of Chennai என்ற பெயரில் tfc எனப்படும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் மூலமாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், பொறியியல் கலந்தாய்வு தொடர்பான விவரங்களுக்கு www.tneaonline.in என்ற முகவரியைப் பார்த்து அறிந்துகொள்ளலாம்.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon