மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 29 ஜன 2020

பச்சையப்பா அறக்கட்டளை நிர்வாகிக்கு பாதுகாப்பு!

பச்சையப்பா அறக்கட்டளை நிர்வாகிக்கு பாதுகாப்பு!

பச்சையப்பா அறக்கட்டளை தற்காலிக நிர்வாகியாக உள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகத்துக்கும், அவரது அலுவலகத்திற்கும் பாதுகாப்பு வழங்குமாறு சென்னை மாநகரக் காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு சென்னையிலுள்ள பச்சையப்பா அறக்கட்டளை நிர்வாகத்தைக் கவனிக்கும் வகையில், தற்காலிக நிர்வாகியாக உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பி.சண்முகம் நியமிக்கப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

அதன்படி நிர்வாகியாகப் பொறுப்பேற்ற நீதிபதி பி.சண்முகம், கடந்த ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது, அறக்கட்டளை நிதியில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சித்தார். இதனை முடக்கும் வகையில் சிலர் சண்முகத்தின் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்தினர். இதனால், அன்றாடப் பணியை மேற்கொள்ள முடியாத நிலை அங்கிருந்த ஊழியர்களுக்கு ஏற்பட்டது. இதையடுத்து நீதிபதி சண்முகத்துக்கும், அறக்கட்டளை அலுவலகத்துக்கும் ஊழியர்களுக்கும் பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

நேற்று (மே 1) இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், அறக்கட்டளை தற்காலிக நிர்வாகியான ஓய்வு பெற்ற நீதிபதி பி.சண்முகத்துக்கும், அறக்கட்டளை அலுவலகம் மற்றும் ஊழியர்களுக்கும் முறையான பாதுகாப்பை வழங்க வேண்டுமென்று சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார்.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon