மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 27 ஜன 2020

விஜய் 63 பட ‘செட்’டில் தீவிபத்து!

விஜய் 63 பட ‘செட்’டில் தீவிபத்து!

விஜய் நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சென்னை விமான நிலையம் அருகே உள்ள மீனம்பாக்கத்தில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. லட்சக்கணக்கான மதிப்புள்ள இந்த அரங்குகளில் விரைவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

மீனம்பாக்கத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில், வீடுகள், வங்கி, தேவாலயம் உள்ளிட்டவற்றுடன் சுமார் 63 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், இன்று பிற்பகலில் அங்கு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

பரவியிருந்த காய்ந்த செடி கொடிகள் காரணமாக தீ வேகமாகப் பரவி அரங்குகளை சூழ்ந்து கொண்டது. தகவல் அறிந்து தாம்பரம், கிண்டி ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி வீரர்கள் தீயை அணைத்தனர். அரங்குகள், ஜெனரேட்டர் உள்ளிட்ட லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

படப்பிடிப்பு இன்று நடைபெறாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். மீனம்பாக்கம் போலீசார் இவ்விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon