மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 25 ஜன 2020

சார் என்னை கிள்ள பாக்குறாங்க சார்... :அப்டேட் குமாரு

சார் என்னை கிள்ள பாக்குறாங்க சார்... :அப்டேட் குமாரு

இப்புடித்தான் எங்கூர்ல ஒரு பெரிய ரௌடி இருந்தாப்ல, எதிர்ப்பு அதிகமானதும் ‘சார் என்னை போட்டுத்தள்ள பாக்குறாங்க சார்’ அப்புடின்னு போய் நண்பர்கள்கிட்ட எல்லாம் புலம்புனார். சீக்கிரமே இவரை தூக்கிருவாங்கன்னு, அவர் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் அவரை விட்டுட்டுப் போக, சப்போர்டுக்கு யாருமே இல்லாம இப்ப ஜூஸ் கடை வெச்சு நடத்திட்டு இருக்காரு. நம்ம பிரதமரும் அதே மாதிரி தான் என்னை கொல்ல பாக்குறாங்கன்னு சொல்லிட்டு இருக்காரு. இவர் மேலயும் நம்பிக்கை இல்லாம அவரை மக்கள் தோக்கடிச்சிட்டா என்ன பண்றதுன்னு யோசிச்சு தான் பண்றாங்களா இல்லையான்னு தெரியல. பேசாம எலெக்‌ஷன் ஸ்பீச் குடுக்க நம்மளே ஒரு அமௌண்டை வாங்கிட்டு செட்டில் ஆகிடலாமான்னு யோசிக்கிறேன். நான் போய் பேசிட்டு வர்றேன். அப்டேட்டை படிங்க.

கோழியின் கிறுக்கல்!!

தாகீர் போல் சிறு சிறு வெற்றிகளையும் கொண்டாடி மகிழுங்கள்!!

வாழ்வு இனிதாகும்!!!

உள்ளூராட்டக்காரன்

கடிகார முள்ளாய் கட்டிலில் உறங்கும் குழந்தை..!

ஜானு

மண்ணைத் தொட்டவனைக் கூட விடலாம் ஆனா பெண்ணைத் தொட்டவனை விடக்கூடாது - தேவராட்டம்.

நீங்க யாரு முடிவு செய்ய? பொண்ணுங்க என்ன உங்க private propertyயா?

அதெல்லாம் அந்தப் பொண்ணு பாத்துப்பா.

லூசுப் பசங்களா.

இன்னும் நிறைய பா ரஞ்சித், மாரிமுத்து செல்வராஜ்கள் தோன்றட்டும்.

shivaas_twitz

தட்டுங்கள் திறக்கப்படும் - மரங்கொத்தி பறவை

செந்திலின்_கிறுக்கல்கள்

சாதாரண காபிக்கும் பில்டர் காபிக்கும் என்ன வித்தியாசம்?

டம்ளர் தான் வித்தியாசம்!

SKP KARUNA

எங்க வீட்லே ஒரு மாடு இருந்தது. பால்காரர் தனியா போய் கறந்தால் சரியா மூணு லிட்டர்தான் கறக்கும். அதுக்கும் மேலே கெஞ்சினாலும் ஒரு சொட்டும் வராது. எங்க அம்மா போய் பக்கத்துலே நின்னு கறக்க சொன்னால், 4 லிட்டர், 4 1/2 லிட்டர் கூட கறக்கும்!

தோனி இல்லாத சிஎஸ்கே, எங்க அம்மா இல்லாத பசுமாடு.

பழைய சோறு

கர்த்தர் சிலை

கவனமாக செய்கிறார்

கருப்புசாமி..!

பர்வீன் யூனுஸ்

கோடை விடுமுறை காலத்தில் பள்ளி ஆசிரியர்களின் ட்வீட்ஸ் நிறைய வலைபாய்கிறது # ஒரு அவதானிப்பு.

செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியன்

எனக்குத்தெரிந்து தமிழ் சினிமாவில் அஜித்,

ஏ.ஆர்.ரஹ்மான்

கிரிக்கெட்டில் தோனி, சச்சின்

அதிகம் பேசாமல் மக்களால் அதிகம் பேசப்படுபவர்கள்!

"நிறைகுடம் நீர் தளும்பல் இல்"

கருப்பு மன்னன்

அதிமுக ஆட்சியில் மக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளனர் - ஓ.பன்னீர்செல்வம்

ஆமா பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி மகிழ்ச்சியாக இருக்கோம்😜

சுபாஷினி

எடப்பாடி கண் அசைத்தால் 40 திமுக எம்.எல்.ஏக்களும் அதிமுக பக்கம் வந்து விடுவார்கள்.! #ராஜேந்திரபாலாஜி

டிடிவி கண் அசைத்தால் எடப்பாடியே டிடிவி பக்கம் வந்திடுவார் போவியா.!

கோழியின் கிறுக்கல்!!

'பபிள்கம்'ஐ அப்படியே சாலையில் துப்பி விட்டு செல்பவருக்கு தான் நாட்டிலேயே உச்சபட்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும்!!

செங்காந்தள்

சென்னையில் சாப்பாடு சரியில்லை என்று கூறிய கணவரை கரண்டியால் அடித்த மனைவி மீது வழக்கு-நியூஸ்18

சாப்பாடு சரியில்லை என்று கூறிய மனைவியை கரண்டியால் அடித்த கணவன் மீது வழக்கு-நியூஸ்108.

ஆண்களுக்கும் காலம் வரும்.

-லாக் ஆஃப்.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon