மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 21 செப் 2020

சேலம்: என்கவுண்டரில் ரவுடி கொலை!

சேலம்: என்கவுண்டரில் ரவுடி கொலை!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ரவுடியை, இன்று போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

சேலம் மாவட்டம் காரிப்பட்டி காவல் நிலைய எல்லையில் உள்ளது எம்.தாதனூர். இந்த ஊரைச் சேர்ந்த சேட்டு என்பவரின் மகன் கதிர்வேல். இவரது வயது 25. பிரபல ரவுடியான இவர் மீது அடிதடி, வழிப்பறி மற்றும் இரண்டு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த மாதம் அயோத்தியாபட்டணம் தேவாங்கர் காலனியைச் சேர்ந்த முறுக்கு வியாபாரி கணேசன் கொலையானார். இந்த வழக்கில் காரிப்பட்டி போலீசார் கதிர்வேலைத் தேடி வந்தனர். நேற்று (மே 1) மாலை வீராணம் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக பைக்கில் வந்த கதிர்வேலை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், அதன்பின்னர் காரிப்பட்டி காவல் ஆய்வாளர் சுப்பிரமணியிடம் ஒப்படைத்துள்ளனர்.

இன்று (மே 2) காலை காரிப்பட்டி ஆய்வாளர் சுப்பிரமணியம் நடத்திய விசாரணையில், அயோத்தியாப்பட்டணம் அருகிலுள்ள குள்ளம்பட்டியில் ஒரு இடத்தில் கணேசனைக் கொலை செய்த ஆயுதங்களைப் பதுக்கி வைத்துள்ளதாகக் கூறியுள்ளார் கதிர்வேல். அதனைக் கைப்பற்றும் வகையில், போலீசார் இன்று காலையில் அந்த இடத்துக்கு கதிர்வேலை அழைத்துச் சென்றனர்.

அப்போது, பாதுகாப்புக்கு சென்ற போலீசாரைத் தாக்கிவிட்டு கதிர்வேல் தப்பியோட முயன்றுள்ளார். இதையடுத்து, காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். காயமடைந்த கதிர்வேல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். ஆய்வாளரைக் கத்தியால் தாக்க முயன்றதால் என்கவுண்டர் நடத்தாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon