மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 அக் 2019

சிவகார்த்திகேயன் பாண்டிராஜ் படத்தின் புதிய அப்டேட்!

சிவகார்த்திகேயன் பாண்டிராஜ் படத்தின் புதிய அப்டேட்!

நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் பாண்டிராஜோடு இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் மே 8ஆம் தேதி தொடங்கயிருக்கிறது.

சிவகார்த்திகேயன் கைவசம் இப்போது ரவிக்குமார் இயக்கும் சயின்ஸ் பிக்‌ஷன் படம், மித்ரன் இயக்கும் ஹீரோ, விக்னேஷ் சிவன் இயக்கும் புதியபடம், கோலமாவு கோகிலா இயக்குநர் இயக்கும் புதியபடம் என வரிசையாக இருக்கின்றன.

இந்நிலையில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தினை சன்பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது. முதலில் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்குவதாக இருந்தது. இப்படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷும் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் ஒப்பந்தமாகியுள்ளனர்.

சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனை மெரினா படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாக்கியவர் இயக்குநர் பாண்டிராஜ். அதன் பின்னர் இருவரும் இணைந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர் இருவரும் இணையும் படம் இதுவாகும்.

படத்திற்கு ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா இணைந்துள்ளார். வரும் 8ஆம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்கயிருக்கிறது.

வரும் மே17 ஆம் தேதி ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வெளியாகயிருக்கிறது. நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் யோகி பாபு, சதிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon