மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 1 மே 2019

கிச்சன் கீர்த்தனா: கம்பங்கூழ்

கிச்சன் கீர்த்தனா: கம்பங்கூழ்

மே தின ஸ்பெஷல்: உழைப்பாளர்களுக்கான உணவு

எளிய, ஏழை மக்களுக்கு ஊட்டச்சத்து வழங்கக்கூடிய அற்புதமான உணவு கூழ். அதை ஆட்சியிலிருந்தவர்களும் செல்வாக்குப் படைத்தவர்களும்கூட புரிந்துவைத்திருந்தார்கள். அதனால்தான் தமிழகத்தில் பெரும்பாலான சிறுதெய்வ வழிபாட்டிலும், அம்மன் கோயில்களிலும் `கூழ் வார்த்தல்’ ஒரு விழாவாகவே நடத்தப்படுகிறது.

இன்றைக்கு சென்னையில் கூழ் கடை வைத்திருப்பவர்களில் பலரும் கிராமத்திலிருந்து வந்தவர்களே. விலை குறைவு என்பதால், மிகக் குறைவான வருமானமுள்ள உழைக்கும் தொழிலாளர்களின் பசியைப் போக்குகிறது கம்பங்கூழ்!

என்ன தேவை?

கம்பு - 2 கப்

மோர் - 6 கப்

உப்பு - தேவையான அளவு

சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி

பச்சை மிளகாய் – ஒன்று

எப்படிச் செய்வது?

கம்பை உடைத்து உமியை நீக்கிக் கொள்ளுங்கள். கம்பை தண்ணீரில் அலசி எடுத்து பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். நன்கு கொதித்து திக்காக வரும்போது (தொட்டுப் பார்த்தால் கைகளில் ஒட்டக்கூடாத பதம்) அதை எடுத்து உருட்டித் தண்ணீரில் போட்டுவிட வேண்டும். தண்ணீரில் கரையாமல் அப்படியே இருக்கும் கம்பு உருண்டை. மற்றொரு பாத்திரத்தில் மோரை ஊற்றிக் கடைந்து... உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்துக் கலக்கவும். தண்ணீரில் இருக்கும் கம்பு உருண்டையைத் தேவைக்கேற்ப எடுத்து, மோரில் சேர்த்துக் கட்டியில்லாமல் நன்கு கரைத்து சின்ன வெங்காயம், மோர் மிளகாய், கொத்தவரங்காய் வத்தலோடு பரிமாறுங்கள்.

என்ன பலன்?

நார்ச்சத்து, புரோட்டீன், பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து என நம் உடலுக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் நிரம்பியது கம்பு. எனவே, கம்பங்கூழ் தரும் ஆரோக்கியப் பலன்களும் அபாரமானவை. ஆனால், கம்பு செரிமானம் ஆக சற்று நேரம் எடுத்துக்கொள்ளும் அடர்த்தியான தானியம். எனவே, கோடைக்காலத்தில் இதை அளவாகச் சாப்பிட வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். இதில் நிறைந்திருக்கும் அமினோ அமிலங்களும், வைட்டமின்களும் உடலுக்கு வலுவூட்டக்கூடியவை. கடினமான உடல் உழைப்பு செய்பவர்களுக்கு அதிக சக்தியை அளிக்கக்கூடியது கம்பங்கூழ். அதோடு, நீரிழிவைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் இதில் இருக்கும் நார்ச்சத்துக்கு உண்டு.

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

புதன் 1 மே 2019