மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

மோடி பேச்சில் விதிமீறல் இல்லை: தேர்தல் ஆணையம்!

மோடி பேச்சில் விதிமீறல் இல்லை: தேர்தல் ஆணையம்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தபின், ராகுல் காந்தி பெரும்பான்மை மக்களைக் கண்டு அஞ்சி ஓடுவதாகவும், சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் போட்டியிடுவதாகவும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று மகாராஷ்டிர மாநிலம் வர்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி விமர்சித்தார்.

மோடியின் பேச்சு வெறுப்புணர்ச்சி நிறைந்ததாகவும், பிரிவினைவாதத் தன்மை கொண்டதாகவும் இருப்பதாகக் குற்றம்சாட்டிய காங்கிரஸ் கட்சி, இவ்விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 5ஆம் தேதியன்று தேர்தல் ஆணையத்தை அணுகியது. பின்னர் மோடி, அமித் ஷா போன்ற பாஜக தலைவர்கள் மீதான தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு நேற்று (ஏப்ரல் 30) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காங்கிரஸ் புகார் தொடர்பாக விளக்கமளிக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் ஏதுமில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon