மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 23 ஜன 2021

யோகி பாபுவின் ‘செளகிதார்’!

யோகி பாபுவின் ‘செளகிதார்’!வெற்றிநடை போடும் தமிழகம்

நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்து வந்த யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் கூர்கா படத்தின் டீஸரை நடிகர் தனுஷ் இன்று (ஏப்ரல் 25) வெளியிட்டார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வளர்ந்து வரும் யோகி பாபு, நகைச்சுவை கதாபாத்திரங்களோடு தனக்கேற்ற ரோல்களில் கதாநாயகனாகவும் கவனம் செலுத்தி வருகிறார். 18 படங்கள் கையிருப்பில் வைத்திருக்கும் யோகி பாபு, அதில் நான்கு படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

சென்ற மாதம் இவர் நடித்த தர்மபிரபு படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சாம் ஆண்டன் இயக்கிவரும் கூர்கா படத்தின் டீஸரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்.

இணையத்தில் ட்ரோலிங்கான விஷயங்களையும், அரசியல், ஆன்மிகம், சினிமா என சென்சேஷன் ஆன காமெடிகளையும் மிக வேடிக்கையாக டீஸருக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். கூர்கா வேலைக்கு தமிழ் பேசும் யோகி பாபு ஆள் மாறாட்டம் செய்து ஒரு மாலுக்கு காவலராகப் போக, அந்த மால், தீவிரவாதிகளால் ஆக்கிரமிக்கப்படுகிறது. நகைச்சுவையான படமாக கூர்கா அமையும் என டீஸர் எதிர்பார்ப்பைக் கொடுக்கிறது.

ஆனந்த ராஜ், சார்லி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பையும், ராஜ் ஆர்யன் இசையமைப்பையும் மேற்கொள்கிறார்கள். 4 மன்கீஸ் ஸ்டூடியோ நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

கூர்கா டீஸர்

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon