மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 18 ஜன 2021

ராஜமௌலியிடம் வாய்ப்பு கேட்ட ஆலியா பட்

ராஜமௌலியிடம் வாய்ப்பு கேட்ட ஆலியா பட்

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட், ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் வாய்ப்பு கேட்ட கதையைப் பகிர்ந்துள்ளார்.

இந்திய சினிமாவின் மாபெரும் பிளாக் பஸ்டரான பாகுபலியின் இரண்டு பாகங்களை இயக்கிய ராஜமௌலி, அதைத் தொடர்ந்து தற்போது நடிகர் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர். நடித்து வரும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை இயக்கி வருகிறார்.

பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடிய அல்லுரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பாபு ஆகியோரை மையப்படுத்தி, சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிக பிரமாண்டமான வரலாற்று படமாக இது உருவாகி வருகிறது.

இந்த நிலையில், இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துவரும், ஆலியா பட் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், “ஒருமுறை இயக்குநர் ராஜமௌலியை விமான நிலையத்தில் பார்த்தேன். அவர் இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் என்னை ஈர்த்ததால், அவருடைய இயக்கத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்திலாவது நடித்திட வேண்டும் எனத் தோன்றியது. அதனால் விமான நிலையத்திலேயே அவருடைய படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டேன். ஆனால், அவர் கதாநாயகி வாய்ப்பு கொடுத்துள்ளார்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தற்போது ஆலியா பட் பிரம்மாஸ்திரா என்ற ஃபேண்டஸி படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் ரன்பீர் கபூருடன் நடித்து வருகிறார்.

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon