மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

மீம்ஸ் கிரியேட்டர்ஸின் செல்லப்பிள்ளை: அப்டேட் குமாரு

மீம்ஸ் கிரியேட்டர்ஸின் செல்லப்பிள்ளை: அப்டேட் குமாரு

காஞ்சனா படம் பார்த்ததையும், வீட்டம்மா ஊருக்கு போனதையும் பத்தியே பேசிகிட்டு இருக்காங்களே, இன்னைக்கு கார சாரமா ஒரு மேட்டரும் அமையலயேன்னு விட்டத்தை பார்த்து உட்கார்ந்துகிட்டு இருந்தேன். அப்ப தான் என் பிடதியை தட்டி மேட்டரை சொல்லிட்டு போனாரு அந்த மகான். விஷயம் என்ன தெரியுமா.. செல்லூர் ராஜு தெர்மாகோல்விட்டு அணையை மூடி ரெண்டு வருசம் ஆயிருச்சாம். அடேயப்பா காலம் எவ்வளவு வேகமா போகுது.. அன்னையில இருந்து நம்ம செல்லப்பிள்ளையாவே மாறிப்போன செல்லூர் ராஜுவுக்கு இதுக்காக ஒரு விழா எடுத்தே கௌரவிக்கலாம். அதே மாதிரி ஒவ்வொரு அமைச்சர் பெருமக்களும் நிகழ்த்துன சாதனைகளை குறிச்சு வைச்சு அரசு விழாவாவே கடை பிடிக்கலாம். முதல்ல வைகை ஆத்துப்பக்கம் அவருக்கு ஒரு நினைவு சின்னம் அமைக்கனும். நீங்க அப்டேட்டை பாருங்க. நான் போய் இதுக்காக அவர்கிட்டயே போய் மனு கொடுத்துட்டு வந்துடுறேன்.

@Kozhiyaar

மாமனார் வீடு வெளியூரில் இருக்கும் ஆண்களுக்கு மட்டுமே பள்ளி விடுமுறை காலம் கோடையில் கிடைக்கும் வசந்த காலம்!!!

@mohanramko

என்னுடைய செலவுக்கு என் அம்மா தான் இன்னமும் பணம் கொடுத்து அனுப்புவார் - மோடிஜி

அந்த அம்மா பார்க்கற வேலை மட்டும் நமக்கு கிடைச்சா செட்டில் ஆகிடலாம்

@azam_twitz

வெற்றியின் அறிகுறி அதிகாலையில் எழுவதிலும் தோல்வியின் அறிகுறி நடுநிசிவரை விழித்திருப்பதிலும் அடங்கியிருக்கின்றது!!!

@Kozhiyaar

நாலைந்து ஆண் நண்பர்கள் கூடினால் அவர்கள் பேசுவது பெண்களை பற்றி தான்!

நாலைந்து பெண்கள் கூடினால் அவர்கள் பேசுவதும் பெண்களை பற்றி தான்!!

@mohanramko

காஞ்சனா 3 படம் பார்க்க ரெடியா இருக்க சொன்னேன் மனைவிகிட்ட.., மனைவி மேக் அப் போட்டு ரெடி ஆவதற்குள் காஞ்சனா 4 வந்திடும் போல..

@RahimGazzali

மோடி, செய்தியாளர்களைச் சந்திப்பதாக பரவிய செய்தி வதந்தி! மறுப்பு தெரிவித்த பா.ஜ.க

அதானே பார்த்தேன்.

அவராவது... சந்திக்கிறதாவது? யாரோ மோடியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க இதை பரப்பியிருக்காங்க.

@kathir_twits

நமது உடல் உஷ்ணம் நீங்க கடும் வெயிலில் இளநீர் நுங்கு விற்கும் வியாபாரிகள் கடவுளின் நலம் தூதுவர்கள் !!

@azam_twitz

உங்க பேஸ்டுலே உப்பு இருக்கா??? Is the word!!!

சொத்துலே உப்பு போட்டுதானே திங்குறே Is the emotion!!!

@HAJAMYDEENNKS

கூட்டத்துல யாரு விஐபின்னு செல்ஃபிதான் தீர்மானிக்கிறது !

@kumarfaculty

நகரங்களில் உயரமான கட்டிடங்களே நிழலைத் தருகின்றன...!!!

@Annaiinpillai

என்னுடைய செலவுக்கு என் அம்மா தான் இன்னமும் பணம் கொடுத்து அனுப்புவார் - மோடிஜி# அவங்க அகவுண்டுல மட்டும் பதினைந்து லட்சம் போட்டுட்டிங்களா ஜி!?

@Kozhiyaar

நான் பேருந்திற்கு காத்திருந்த ஆலமரத்தடியில் கிடைத்த நிழலின் சுகம், இப்பொழுது அதே இடத்தில் இருக்கும் நிழற்குடையில் ஏனோ கிடைக்கவில்லை!!

@Annaiinpillai

வீட்டில் இருந்து வெளியே கிளம்ப மனைவிக்காக காத்திருந்த கணவன்மார்கள், மனோகரனாக மனதளவில் மாறியும் பொங்கி எழாமல் இருப்பது டிசைன்!

@amuduarattai

கட்சி விரும்பினால் வாரணாசியில் போட்டி. -பிரியங்கா.

உங்க விருப்பம் வேற, கட்சி விருப்பம் வேறயா.!?

@Kozhiyaar

'இரண்டு நாட்கள் நீயில்லாம வீடே இவ்வளவு கந்தர கோலமா இருக்கே, நீயில்லாம என் வாழ்க்கை எப்படி இருக்கும்'னு ஊருக்கு சென்றிருக்கும் மனைவியிடம் கூறினால்,என்னாச்சுங்க? எனக் கேட்பவர் சாதா மனைவி, 'வீட்டை என்ன பண்ணி தொலைச்சிருக்க!?' என்று திட்ட ஆரம்பிப்பவர் தான் அவதார மனைவி!!

@mohanramko

'வாயை வச்சிகிட்டு சும்மா இருந்தாலே போதும்' செல்ஃபி எடுக்கும்போது

@nandhu_twitts

யாருமே உதவி செய்யாம நீயே எழுந்து நின்னயே அப்போ உனக்கு வயசு 3...

இப்ப மட்டும் எதுக்கு பயப்படுற..!!

-லாக் ஆஃப்

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon