மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஏப் 2019

ஸ்ரீகாந்த் விதியை மீறி வாக்களித்தார்: சத்யபிரதா சாஹு

ஸ்ரீகாந்த் விதியை மீறி வாக்களித்தார்:  சத்யபிரதா சாஹு

மக்களவைத் தேர்தலில் சிவகார்த்திகேயன் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நிலையில் விதியை மீறி வாக்களித்தார் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது ஸ்ரீகாந்தும் அவ்வாறு விதியை மீறி வாக்களித்ததாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர், ரமேஷ் கண்ணா, டிரம்ஸ் சிவமணி உள்ளிட்ட திரை பிரபலங்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. இருப்பினும் சிவகார்த்திகேயன் தனது வாக்கினை பதிவு செய்து ட்விட்டரில் பதிவிட்டார். ஸ்ரீகாந்தும் வாக்களித்ததாக பத்திரிகையாளர்களிடம் கூறினார். ஆனால் அவர் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் விரலில் மை மட்டும் வைக்கப்பட்டது என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குப்பதிவு செய்தது தொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சத்யபிரதா சாஹு நேற்று (ஏப்ரல் 24) தெரிவித்தார். மேலும் விதியை மீறி நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்திருந்தாலும், அவரது வாக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

வியாழன் 25 ஏப் 2019