மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 9 ஜூலை 2020

கேங்க்ஸ்டரான ஸ்ருதி ஹாசன்

கேங்க்ஸ்டரான ஸ்ருதி ஹாசன்

துப்பாக்கி பட வில்லன் வித்யூத் ஜம்வால் நாயகனாக நடிக்கும் இந்திப் படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் கேங்க்ஸ்டராக நடிக்கிறார்.

சன் தொலைக்காட்சியில் ‘ஹலோ சகோ’ என்ற டாக் ஷோ நடத்திவரும் ஸ்ருதி ஹாசன், சிங்கம் 3க்குப் பிறகு நீண்ட இடைவெளி விட்டு நடிக்கிறார். துப்பாக்கி, அஞ்சான் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்த பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால் தற்பொது கதாநாயகனாக இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் ஹாலிவுட் இயக்குநரின் இயக்கத்தில் இவர் கதாநாயகனாக நடித்த ஜங்கிள் என்ற படம் வெளியானது.

முதன் முறையாக நடிகை ஸ்ருதி ஹாசனும் வித்யூத் ஜம்வாலும் இணையும் பாலிவுட் படத்திற்கு பவர் என தலைப்பிடப்பட்டுள்ளது. மகேஷ் மஞ்சரேக்கர் இப்படத்தை இயக்குகிறார்.

முழுக்க மும்பையை மையப்படுத்திய கேங்க்ஸ்டர் கதையாக உருவாகிவரும் இப்படத்தில், வித்யூத் ஜம்வால் அண்டர் வோர்ல்ட் டானாக இருக்கும் தன் அப்பாவின் இடத்தைக் கைப்பற்றப் போராடும் கேங்க்ஸ்டராக நடிக்கிறார். அவரது ஜோடியாக நடிக்கும் ஸ்ருதி ஹாசனும் படத்தில் கேங்க்ஸ்டராக நடிக்கிறார்.

1972ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் கிளாஸிக் காட்ஃபாதர் திரைப்படத்திற்கு சமர்ப்பணமாக உருவாகிவரும் இப்படம், வரும் ஜூலை 12ஆம் தேதி ரிலீஸாகயிருக்கிறது.

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon