மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

கிச்சன் கீர்த்தனா: வெஜ் சாலட்

கிச்சன் கீர்த்தனா: வெஜ் சாலட்

எடை குறைப்புக்குத் துணை நிற்கும் சாலட்

பொதுவாகக் காய்கறித் துண்டுகளையோ, பழத் துண்டுகளையோ, இரண்டையும் கலந்தோ சமைக்காமல் உண்பதைத்தான் ‘சாலட்’ என்கிறோம். இது ஆரோக்கியமானது. கொழுப்புச் சத்து குறைவானது. இதற்கு எதிர்மாறாகச் சமைத்த இறைச்சியும் அதிக கலோரி கொண்ட உணவுப் பொருட்களும் கலக்கப்பட்ட சாலட் வகையறாக்களும் இருக்கின்றன. இருவித சாலட்களுமே உலகப் பொது உணவுதான். பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே ரோமானியர்கள் சாலட்டை உண்டிருக்கிறார்கள். அதன் கண்டுபிடிப்பாளர்கள் ரோமானியர்களே என்பது வரலாற்றாளர்களின் கருத்து.

என்ன தேவை?

ஆவியில் வேகவைத்த பூசணி, கேரட், பறங்கிக்காய், வெள்ளரிக் கலவை - ஒரு கப்

சீரகத் தூள், மிளகுத் தூள் - தலா கால் டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை – சிறிதளவு

எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்

இந்துப்பு – சிறிதளவு

எப்படிச் செய்வது?

வேகவைத்த காய்கறிகளுடன் சீரகத் தூள், மிளகுத் தூள், இந்துப்பு, புதினா, கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.

என்ன பலன்?

காய்கறிகளிலிருந்து நமக்குத் தேவையான வைட்டமின்கள், மினரல்களான‌ பாஸ்பரஸ், கால்சியம், மாங்கனீசு, இரும்புச்சத்து, பொட்டாசியம், துத்தநாகம் ஆகியவை கிடைக்கின்றன. தினமும் இதை ஒரு கப் அளவு காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம். எடையைக் குறைக்க மிகவும் உதவும்.

நேற்றைய ரெசிப்பி: கார்ன் சாலட்

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon