மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 9 ஜூலை 2020

பொன்பரப்பி வன்முறை: கிருஷ்ணசாமி கருத்து!

பொன்பரப்பி வன்முறை: கிருஷ்ணசாமி கருத்து!

பொன்பரப்பியில் வன்முறையை தூண்டியவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நடந்த அன்று பொன்பரப்பியில் பாமக-விசிக இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து பட்டியலின மக்களின் வீடுகளின் மீது பாமகவினர் தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. வன்முறைக்கு காரணம் பாமகதான் என்று குற்றம் சாட்டிய விசிக தலைவர் திருமாவளவன், பொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸோ, பாதிக்கப்பட்ட மக்களின் மீதே நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இன்று (ஏப்ரல் 25) சென்னையில் செய்தியாளர்களை சந்திக்கும்போது பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, “பொன்பரப்பி, பொன்னமராவதி சம்பவங்களுக்கு சமூக வலைதளங்கள்தான் காரணம். சமூக வலைதளங்களில் இளைஞர்கள் பொறுப்பில்லாமல் நடந்துகொள்கிறார்கள். நான் பார்த்தவரை மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். யாரும் சாதி மற்றும் மதக்கலவரங்களில் ஈடுபட வேண்டும் என்று விரும்புவதில்லை. ஆனால் சில சுயநல சக்திகள் அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். பொன்பரப்பியில் வன்முறையைத் தூண்டுவதற்கு யார் காரணமாக இருந்தார்களோ அவர்களை கண்டறிந்து காவல் துறையினர் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவர்களை பொதுமக்கள் அம்பலப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

பொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்ட கிருஷ்ணசாமி, “கலவரத்தின் உண்மைத் தன்மையை காவல் துறையினர் விளக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon