மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

சைக்கோ கில்லராக மிரட்டும் விஜய் ஆண்டணி

சைக்கோ கில்லராக மிரட்டும் விஜய் ஆண்டணி

விஜய் ஆண்டணி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படத்தின் ட்ரெய்லர் நேற்று (ஏப்ரல் 24) மாலை வெளியானது.

திமிரு பிடிச்சவன் படத்தைத் தொடர்ந்து விஜய் ஆன்டணி ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம் கொலைகாரன். லீலை படத்தை இயக்கிய ஆண்ட்ரு லூயிஸ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இரும்புத்திரை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அர்ஜுன் இந்தப் படத்தில் நடிக்கிறார்.

அஷிமா நர்வால், நாசர், சீதா, பகவதி பெருமாள், சதீஷ், சம்பத் ராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஸ்னீக் பீக் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஒரு சைக்கோ கொலைகாரனைப் பற்றிய கதையாகக் கொலைகாரன் இருக்கும் என இதன் ட்ரெய்லரில் தெரிகிறது. கொலைகாரனாக விஜய் ஆண்டணியும், காவல் துறை அதிகாரியாக அர்ஜுனும் நடித்துள்ளனர். விறுவிறுப்பான சைக்கோ த்ரில்லராக இருக்கும்பட்சத்தில் மே மாத ரேஸில் கொலைகாரன் ரசிகர்களைக் கவரலாம்.

சைமன் கே கிங் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். முகேஷ் ஒளிப்பதிவு செய்ய, ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு செய்துள்ளார்.

தியா மூவிஸ் பி. பிரதீப் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை ஜி. தனஞ்செயனின் பாஃப்டா மீடியா வொர்க்ஸ் வெளியிடுகிறது.

கொலைகாரன் ட்ரெய்லர்

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon