மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஏப் 2019

டிஜிட்டல் திண்ணை: ஜூன் 3... முதல்வர் ஆகிறாரா மு.க.ஸ்டாலின்?

டிஜிட்டல் திண்ணை: ஜூன் 3... முதல்வர் ஆகிறாரா மு.க.ஸ்டாலின்?

மொபைல் டேட்டா ஆன் செய்தோம். வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.

“தேர்தலுக்கு சில நாட்கள் கழித்து திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், நேராக உள்ளே நுழையும்போது முதலில் வலதுபுறம் இருக்கும் அந்த அறையில் திமுகவின் இரு முக்கிய நிர்வாகிகள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

தேர்தல் நிலவரம் பற்றி பேசிக் கொண்டிருந்த அவர்களில் ஒருவர், ‘ஜூன் 3 ஆம் தேதி கலைஞர் பிறந்தநாள்ல தலைவர் முதல்வராகப் பதவியேத்துப்பார். பதவியேற்பு விழா நடக்கும் இடம் எதுன்னுதான் இப்ப நாம யோசிக்கணும்’ என்கிறார். அதற்கு மற்றொருவர், ‘வள்ளுவர் கோட்டத்துல வச்சிக்கலாமே?’ என்று கேட்க, ‘அங்க வேணாம். கலைஞர் வள்ளுவர் கோட்டத்துல பதவியேத்துக்கிட்ட டர்ம்தான் அவர் முழுசா முடிக்க முடியாம போச்சு. அதனால வேறு இடத்துல வச்சிக்கலாம்’ என்று பதில் சொன்னார் முதலில் பேசிய நிர்வாகி.

அறிவாலயத்தில் இரு திமுக நிர்வாகிகள் மட்டும் பேசிக்கொள்ளும் பேச்சல்ல இது. ஸ்டாலின் குடும்பத்தினர் முதல் தலைமைக் கழக நிர்வாகிகள் வரை இப்போது இப்படித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

ஸ்டாலினின் குடும்பத்தில் , ‘இந்தியாவுல வேற எந்த மாநிலத்துல மோடி எதிர்ப்பு அலை வீசுதோ இல்லையோ, தமிழ்நாட்ல மோடி எதிர்ப்பு அலை வீசியிருக்கு. அதனால அதிமுக தரப்புல எவ்வளவு பணம் கொடுத்திருந்தாலும், அவங்களுக்கு வெற்றி கிடைக்காது. சட்டமன்ற இடைத்தேர்தல் முழுசா நமக்குதான் சாதகமா இருக்கும். ஜெயலலிதா இறந்த சில மாதங்கள்லயே சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களை திமுக பக்கம் வர வைச்சு ஆட்சியப் பிடிக்க திமுகவுல சிலர் ஒரு ஆபரேஷன் பண்ணினாங்க. ஆனால், அதை விரும்பலைனு அன்னிக்கு ஸ்டாலின் சொல்லி தடுத்துட்டாரு. இன்னிக்கு உதயசூரியனில் நின்று ஜெயிச்சு வருகிற எம்.எல்.ஏ.க்களை வச்சி இதே சட்டமன்றத்துல ஸ்டாலின் முதல்வர் ஆவாரு’ என்று சில நாட்களாக அழுத்தமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக சட்டமன்றத்தில் மொத்தம் 234 எம்.எல்.ஏ.க்களில், ஆட்சியைப் பிடிக்க 118 எம்.எல்.ஏ.க்கள் தேவை. இப்போது சபையில் திமுக கூட்டணிக்கு திமுக 88+ காங்கிரஸ் 8+ முஸ்லிம் லீக் 1 என மொத்தம் 97 இடங்கள் இருக்கின்றன. 22 தொகுதி இடைத்தேர்தல்களில் திமுக 21 தொகுதிகளைப் பிடித்தால்தான் பெரும்பான்மையை பிடிக்க முடியும். அவ்வாறு பிடித்துவிட முடியும் என்று நம்புகிறார்கள் ஸ்டாலின் குடும்பத்தினர். நடந்து முடிந்த 18 தொகுதி இடைத்தேர்தல்களில் ஒன்றிரண்டு குறைந்தால் கூட, நடக்க இருக்கும் நான்கு தொகுதி இடைத்தேர்தல்களிலும் வெற்றிபெறுவதற்காகத்தான் பொறுப்பாளர்களை சிறப்பு கவனம் எடுத்து நியமித்திருக்கிறாராம் ஸ்டாலின்.

கே.என். நேருவை முதலில் அரவக்குறிச்சிக்குதான் பொறுப்பாளராக்க நினைத்தாராம் ஸ்டாலின். ஆனால் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரத்துக்கு மாற்றிவிட்டார். தென் மாவட்டத்தில் அதிமுகவும் புதிய தமிழகமும் இணைந்து களப்பணியாற்றும் நிலையில் அதை இறங்கியடித்து சமாளிக்க நேரு போன்ற அதிரடிக் களப்பணியாளர்கள் தேவை என்றும் கருதியே நேருவை ஒட்டபிடாரத்துக்கு அனுப்பியிருக்கிறாராம். இதே ரீதியில்தான் அரவக்குறிச்சிக்கு பொன்முடியை பொறுப்பாளராக போட்டிருக்கிறார் ஸ்டாலின். சூலூர் பொறுப்பாளராக ஸ்டாலினுடைய நம்பிக்கைக்குரிய எ.வ.வேலு நியமிக்கப்பட்டிருக்கிறார். தொகுதிக்கு முதல் ரவுண்டு போய் வந்த எ.வ.வேலு, ’எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போய் தொகுதியை ஜெயிச்சுடலாம்’ என்று ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறாராம்.

திருப்பரங்குன்றம்தான் திமுகவுக்கு இந்த நான்கு தொகுதிகளில் கொஞ்சம் வீக் என்று கருதப்படுகிறது. முதலில் அங்கே வேட்பாளராக மதுரையின் முன்னாள் மேயர் செ.ராமச்சந்திரனை நிறுத்த முடிவு செய்தாராம் ஸ்டாலின். ஆனால் அவர் இப்போது தன்னால் போட்டியிட இயலவில்லை என்று சொன்னதால் மீண்டும் வாய்ப்பு சரவணனுக்கே கிடைத்திருக்கிறது. இத்தொகுதியின் பொறுப்பாளர் திமுகவின் துணைப் பொதுச் செயலாளரான ஐ.பெரியசாமி. கட்சியினரை அரவணைத்து வேலைவாங்குவதில் பேர் பெற்ற ஐ.பெரியசாமி திருப்பரங்குன்றம் பற்றி ஸ்டாலினிடம், ‘இங்கே அதிமுகவும், அமமுகவும் வாக்குகளை பிரித்துக் கொள்ளத்தான் போட்டியிடுகிறார்கள். நாம்தான் ஜெயிப்போம்’ என்று சில கள வியூகங்களைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

4 நிமிட வாசிப்பு

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

புதன் 24 ஏப் 2019