மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 3 ஜூலை 2020

மோடிக்கு நாலு மீம்ஸ் பார்சல்: அப்டேட் குமாரு

மோடிக்கு நாலு மீம்ஸ் பார்சல்: அப்டேட் குமாரு

உங்களுக்கு என்னய்யா பாவம் பண்ணேன்.. காலையிலேயே சீமான் தம்பி பேசுன ஆடியோன்னு ஒண்ணை வாட்ஸப்புல அனுப்பிவிட்டாங்க. கையை முறுக்கி ஏதாவது ஆவேசமா பேசுவாங்கன்னு பார்த்தா, ஒரே ஆபாசமா இருக்கு. நாலு வார்த்தைல ஆஃப் பண்ணிட்டேன். தண்ணி குடிக்குற செம்பு ஒண்ணு மேல வந்து பறந்து விழுந்துச்சு. அப்ப கோவிச்சுகிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போன என் மனைவி இன்னும் போன் எடுக்கல. நல்லா இருந்த குடும்பத்துல இப்படியா குட்டையை கிளப்புவீங்க.. அப்புறம் இந்த ஆடியோவையும் எடுத்து டிக் டொக்ல போட்டு விட்ராதீங்க.

ஆமா.. நம்ம மோடி ஏதோ தன்னை பற்றி வரும் மீம்ஸ் எல்லாத்தையும் ரசிப்பதா சொல்லிருக்காரே உண்மையான்னு ஒரு தம்பி இன்பாக்ஸ்ல வந்து கேட்டான். அவர் சொன்னது என்னமோ உண்மை தான். ஆனா அவர் பார்த்ததா சொன்னது ஏதாவது இந்தி மீம்ஸா இருக்கும். தமிழ் மீம்ஸ்லாம் பார்த்தார்னா மீம்ஸ் போடுறதுக்கே தடை போட்ருவாருன்னு சொன்னேன்.. அப்டேட்டை பாருங்க.

@Kozhiyaar

அனைத்து குடும்ப பிரச்னைகளுக்கும் காரணம் கணவனின் ஞாபக மறதியும், மனைவியின் ஞாபக மிகுதியும் தான்!!!

@ShivaP_Offl

சிலபேரு எப்படா நாம இங்கிலீசுல பேசலாம்ன்னே காத்து இருப்பாங்க போல,

பஸ்ஸ்டாண்டு,இரயில்வே ஸ்டேஷன் ஏரியாவுக்கு போகவே பயமா இருக்குது....

@Kannan_Twitz

திருடித் திண்ணும் பூனைகளை வீட்டிற்குள் வைத்துக் கொண்டு... காவல் நாய்களை வெளியில் வைத்து என்ன பயன்?

@mohanramko

மற்றவர்களுக்கு

செய்யும் தொழிலே தெய்வம் .

சிற்பிகளுக்கு

செய்யும் தெய்வமே, தொழில்

@Kadhar_Twitz

காஞ்சனா 3 பாத்தியே உனக்கு பயம் வர்ல

வந்துச்சு

எப்போ ?

படம் முடிஞ்சதும் அடுத்து காஞ்சனா 4 வரும்னு

போடும் போது

@Sabapat06852198

ஏம்மா நேத்திக்கு புத்தகதினமாமே உனக்கு பிடித்த புத்தகம் எது ?

அது வந்துங்க என்கணவரோட செக் புக்தான் அதுல அவர் கைஎழுத்து மட்டும் இருந்துச்சுன்னா மி ஹேப்பி

@SubashiniBA

லாரன்ஸிடமிருந்து காஞ்சனாவையும்

சூரியாவிடமிருந்து சிங்கத்தையும்

எடப்பாடியிடமிருந்து தமிழ்நாட்டையும்

மோடியிடமிருந்து இந்தியாவையும்

முதலில் காப்பாத்தனும்..!

@saravananucfc

இந்தியா வைத்துள்ள அணுகுண்டுகள் தீபாவளி பண்டிகைக்காக அல்ல - மோடி.

கார்த்திகை தீபத்துக்கு எடுத்து வச்சிருக்காரு போல.

@shivaas_twitz

என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்று கூறுபவர்கள், அதிலிருந்து சில பக்கங்களை கிழித்திருக்கக்கூடும்..!

@mufthimohamed1

பிரதமராக பொறுப்பேற்பேன் என ஒருபோதும் நான் நினைத்ததில்லை - மோடி #

நாங்க மட்டும் என்ன கனவா கண்டோம்

@Annaiinpillai

எட்டு போட்டா தான் லைசென்ஸ்னு சொன்னா மாதிரி தோசைய வட்டமா சுட்டா தான் கல்யாணம்னு சொன்னா ஒருத்தருக்கும் கல்யாணம் நடக்காது ஏன்னா தோசையோட டிசைன் அப்படி!

@SubashiniBA

வெடிகுண்டை விட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை - மோடி

போங்க சார் நீங்க வேற காமெடி பண்ணிட்டு..

எங்க குமரி மாவட்டத்துல 40000 வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வெடிக்கவேயில்லை.

@Annaiinpillai

ஹோலோ என்ற சொல்லில் ஆரம்பிக்காத தொலைப்பேசி உரையாடல் கூகுளில் தேடினாலும் இருக்காது!

@வெ. பூபதி

35 வயசுல இரசிக்க கத்துக்கறதெல்லாம் எந்த டிஸைன்ல சேருமோ?!

@shivaas_twitz

அந்த காலத்துல, சச்சின் அவுட் ஆகிட்டா டிவியை நிறுத்திடுவோம்...

அப்போல்லாம் வேற சேனல் கிடையாது..!

HappyBirthdaySachin

@கருப்பு கருணா

உங்க கட்சியே சீக்கிரம் ஆட்சியைப் பிடித்து அந்த போன்ல பேசினவருக்கு தமிழ் வளர்ச்சி துறையை அளித்து மொழி வளர்ச்சிக்கு உதவுமாறு முப்பாட்டன் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்

-லாக் ஆஃப்

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon