மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

விஜய் சேதுபதியாக விரும்பும் கஸ்தூரி

விஜய் சேதுபதியாக விரும்பும் கஸ்தூரி

நடிகை கஸ்தூரி இ.பி.கோ 302 என்ற திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

காத்தவராயன் படத்தை இயக்கிய சலங்கை துரை இ.பி.கோ 302 என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் துர்கா என்ற பெய‌ரில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் கஸ்தூரி. மேலும் நாக சக்தி, வர்ஷிதா, வையாபுரி, ராபின் பாபு, போண்டாமணி, வினிஸ் குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.

இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று (ஏப்ரல் 23) சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகை கஸ்தூரி “போலீஸ் அதிகாரியாக நடிக்க வேண்டுமென்பது எனது நீண்ட நாள் கனவாகும். கிரண் பேடி போன்ற போலீஸ் கதாபாத்திரமான இதில் சிங்கம், சாமி படங்களைப் போல மாஸான ஆக்‌ஷன் காட்சிகளும் உண்டு” என்றார்.

மேலும் “சினிமாவில் என்னுடைய ரீ-எண்ட்ரிக்கு நடிகர் விஜய் சேதுபதி தான் காரணம். அவரால் ஹீரோ, வில்லன், திருநங்கை என எந்த கதாபாத்திரமென்றாலும் பொருந்திக் கொள்ளமுடியும். அதே போல நானும் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை செய்ய ஆசைப்படுகிறேன்”எனக் கூறினார்.

படத்தின் ஒளிப்பதிவை தண்டபாணி மேற்கொள்ள, முத்துவிஜயன் இசையமைக்கிறார். சவுத் இந்தியன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது கஸ்தூரி விஜய் ஆண்டனியுடன் தமிழரசன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon